நாட்டில் மூன்றாவது கொரோனா அலைக்கு வாய்ப்புள்ளது - சஜித்
நாவலப்பிட்டியில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்திவிட்டோம் என உறுதியாக தெரிவிக்க முடியாதநிலையில் அரசாங்கம் உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சுகாதாரமுறை பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது சுற்று கொரோனாவுக்கு மத்தியில் தங்களை கொரோனாவை தோற்கடித்தவர்களாக காண்பிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலை ஆரம்பமாகிவிட்டது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment