மக்களை புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுமாறு விமல் கோரிக்கை
தேர்தல் ஆணைக்குழு ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க முயல்கின்றது என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச அரசாங்கத்திற்கு மக்களின் முழுமையான ஆணையில்லை என காண்பிப்தற்கு தேர்தல் ஆணைக்குழு முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு ஆகஸ்ட் ஐந்தாம் திகதி வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஓன்றிய நாடுகளின் தூதரகங்கள் இதற்கான உத்தரவை தேர்தல் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசாங்கத்திற்கு மக்களின் உண்மையான முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை என தூதரகங்களால் தெரிவிக்க முயலும் என விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மக்களை புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்,கடந்த கால தேர்தல்களை விட அதிகளவில் வாக்களித்து கோத்தபாய ராஜபக்சவிற்கான ஆதரவை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இவரின் காதுகளுக்கு அசரீரி கேட்குது போல. அது வேறுபிரச்சினையே.
ReplyDeleteஅதி நிச்சயமாக இம்முறை சிறப்பாக கொழும்பு மாவடட வாக்காளப் பெருமக்கள் மிகவும் கவனமாக வாக்களிப்பார்கள்.
ReplyDeleteඇත්ත වශයෙන්ම, මෙවර කොළඹ දිස්ත්රික්කයේ ඡන්ද දායකයින් ඉතා ප්රවේශමෙන් ඡන්දය ප්රකාශ කරනු ඇත.