Header Ads



நாட்டுப் பற்றுடன் வாழும் என்னை சிறைப்படுத்தி, அடிமைப்படுத்த நினைக்கிறார்கள் - றிசாத்


- Hasfar A Haleem -

தங்களுடைய அரசியல் வளர்ச்சிக்காகவும் 3/2 பெரும்பான்மையை பெறுவதற்காகவும் கால நேரத்தை வீணடித்து விசாரனைக்கு அழைக்கிறார்கள், நாங்கள் நாட்டுப் பற்றுடன் சீராகவும் தூய்மையாகவும் வாழ்கின்றவர்கள் எமது பயணம் சீரானது எமது கட்சி பிரதிநிதிக்கு திருகோணமலையில் அளிக்கும் வாக்குகள் இனவாதிகளுக்கு விமல் வீரவம்ச போன்றவர்களுக்கு கொடுக்கும் சாட்டையடியாகும் எனவே அப்துல்லா மஃறூப் அவர்களை அமோக வாக்குகளால் வெற்றியடையச் செய்யுங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை ஜமாலியா பகுதியில் இன்று (25) இடம் பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாட்டுப் பற்றுடன் வாழும் என்னை எந்த வித குற்றமும் இல்லாமல் சிறைப்படுத்த அடிமைப்படுத்த நினைக்கிறார்கள் இறைவன் எம்மை பாதுகாப்பான் இறைவனை தவிர யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்றார்.

1 comment:

Powered by Blogger.