பயங்கரவாத சஹ்ரான் குழுவின் தாக்குதல் முறியடிக்கப்படாமைக்கான காரணம் - ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டவை
(அததெரண)
உயிர்த்த ஞாயிற்று தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்னர் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பின்பற்றிய கடுமையான பொறுப்பற்ற நடவடிக்கையே தாக்குதல் முறியடிக்கப்படாமைக்கான காரணம் என முன்னாள் சிரேஸ்ட புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இருவர் நேற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர்.
பெறப்பட்ட புலனாய்வு தகவல்களுக்கு அமைய நிலந்த ஜயவர்தன உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை அது தொடர்பில் இராணுவ புலனாய்வுத் பிரிவினருக்கு அறிவித்திருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் என்பதும் ஆணைக்குழுவில் தெரியவந்தது.
கடந்த வாரம் இரண்டு நாட்கள் சாட்சியம் வழங்கிய முன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர், நேற்றும் (01) மேலதிக விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இதன்போது மேலதிக சொலிசிட்டர் நாயகம் சமர்ப்பித்த உளவுத்துறை ஆவணம் குறித்து விளக்கிய அவர், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹஸ்புல்லா மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் தீவிர முஸ்லீம் அமைப்பான ´சுன்னத் வல் ஜமாத்´ அமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்தாக கூறினார்.
தாக்குதல் நடந்த காலப்பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக இருந்த தமக்கு தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்தினம், நிலந்த ஜயவர்தன அழைப்பெடுத்து பாராளுமன்றத் தெரிவு குழுவிடம் தெரிவித்திருந்தாலும் அவ்வாறு தம்மை தொலைப்பேசியில் அழைக்கவில்லை என கூறினார்.
எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிற்று தினத்தன்று பயங்கரவாதிகளால் ஐந்து தற்கொலை குண்டுதாரிகள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்கனவே தீவிர புலனாய்வில் ஈடுபட்ட இராணுவ புலனாய்வு பிரிவு அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தாகவும், மேலும் தாக்குதலுக்கு முன்னர் அவர்களின் பெயர்களும் இடங்களும் தெளிவாக இருந்தாகவும் அவர் ஆணைக்குழுவில் வெளிப்படுத்தினார்.
அவ்வாறான நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த தகவல்களை இராணுவ புலனாய்வுத் துறைக்கு தெரிவிக்க அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் எதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் பயங்கரவாதிகளை துரத்தி பிடித்து கைது செய்து தாக்குதலை தடுத்திருக்கலாம் என அவர் கூறினார்.
சில காரணங்களால் தேசிய பாதுகாப்பு அரசியல்வாதிகளால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்பில் இராணுவம் எப்போதும் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
இவற்றை செவிமடுத்த ஆணைக்குழு உயிர்த்த ஞாயிற்று தாக்குதலுக்குப் பின்னர் அப்போதைய அரசாங்கத்தின் அமைச்சரால் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரை விடுவிக்க இராணுவத் தளபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டாரா? என வினவியது.
அதற்கு பதிலளித்த சாட்சியாளர், முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அப்போதைய இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவை அழைத்து சந்தேகநபர் குறித்து விசாரித்ததாக தெரிவித்தார்.
அதன் பின்னர், இராணுவ தளபதி தம்மை அழைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டாரா? என கேட்டதாகவும் தான் ஆம் என்று பதிலளித்த பின்னர் தொடர்ந்தும் அவரிடம் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கியதாக சாட்சி கூறினார்.
தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், தெஹிவளை பகுதியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்னும் பயங்கரவாத விசாரணை பிரிவின் காவலில் இருப்பதாக மேலும் தெரிவித்தார்.
Post a Comment