பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் சு.க. வேட்பாளர்களுக்கு ஹூ சத்தமிட்டு அவமதிப்ப
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டங்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக தொடர்ந்தும் ஹூ சத்தமிட்டு அவமதிப்புகளை ஏற்படுத்தினால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கே நஷ்டம் ஏற்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இப்படியான சம்பவங்கள் காரணமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்திற்கும் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இம்முறை பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களான ஜகத் புஷ்பகுமார மற்றும் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோர் மொனராகலை மற்றும் பதுளையில் நடந்த பொதுஜன பெரமுனவின் கூட்டங்களில் ஹூ சத்தமிட்டு அவமதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் அவமதிக்கப்பட்ட கூட்டங்களில் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தாலும் ஏற்பட்ட சம்பவங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை எனவும் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment