ரோசி எந்தப் பக்கம்...?
தனது மகன் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக தேர்தலில் போட்டியிடும் நிலையில், கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க, ரணில் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ரோசி சேனாநாயக்க கலந்துகொண்டுள்ளார்.
கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ரோசி சேனாநாயக்க சஜித் பிரேமதாசவிற்கே ஆதரவு வழங்கியிருந்தார். அத்துடன், அவரின் கட்சி தலைமையகத்திற்கும் சென்றிருந்தார்.
எனினும், ரோசி சேனாநாயக்கவை பதவியிலிருந்து நீக்குவதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தனது பதவியை பாதுகாப்பதற்கு ரோசி சேனாநாயக்க ரணில் தரப்பிற்கு ஆதராக செயற்படுகின்றார்.
இந்நிலையில், நேற்றைய கூட்டத்தின்போதும் ரோசி சேனாநாயக்க மிகவும் அமைதியாக இருந்ததாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment