Header Ads



ரிஷாட்​ கைது செய்யப்படுவதை, மஹிந்த தேசப்பிரிய தடுக்கிறார் - விமல் வீரவன்ஸ


முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனைக் கைதுசெய்வதைத் தடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு இல்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துருகிரிய பிரதேசத்தில் இன்று -22- நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர்,

ரிஷாட்டின் தம்பி நிரூபிக்கக்கூடிய காரணங்களுடனேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இப்போது அதே காரணங்களுடன் ரிஷாட்டை கைதுசெய்ய முயற்சிக்கும் போது,  ரிஷாட்டை தேர்தல்​ நிறைவடையும் வரை கைதுசெய்ய வேண்டாமென தெரிவித்து, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ்மா அதிபருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

எனவே யாரை கைதுசெய்ய வேண்டும்? எப்போது, எங்கே என்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் இருக்கிறார் என விமல் வீரவன்ஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.