பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள், பயிற்சிகள் நடத்த தடை
எதிர்வரும் திங்கட்கிழமை தரம் 11, 12, 13 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. ஏனைய வகுப்புகள் அடுத்த மாதம் பத்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
எனினும் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு பயிற்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மாணவர்கள் ஒருவரை ஒருவர் தொடாத வகையிலான போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
Post a Comment