Header Ads



ரிஷாத்தின் கைதை, தேர்தல் ஆணைக்குழு தடுத்துவிட்டது - விமல் வீரவன்ச ஆத்திரம்


(இராஜதுரை ஹஷான்)

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வதை தவிர்க்குமாறு குறிப்பிடும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கிடையாது. சுயாதீனம் என்ற நாமத்துக்குள் ஒரு சில ஆணைக்குழுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றன. இந்நிலைமை மாற்றியமைக்கப்படும் என கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.

 அத்துருகிரிய  பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  அவர் மேலும் குறிப்பிடுகையில்,  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் கடந்த அரசாங்கத்தில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை.  தாக்குதல்தாரிகளுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்ட அரசியல்வாதிகள் பாதுகாக்கப்பட்டார்கள். ஆட்சி மாற்றத்தை தொடர்பு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் முறையாக முன்னெடுக்கப்படுகின்றன பொலிஸ் தரப்பினர் பல விடயங்கள் குறித்து ஆதார பூர்வமான தகவல்களை முன்வைத்துள்ளார்கள். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரன் உரிய  காரணிகளின் நிமித்தமே கைது செய்யப்பட்டுள்ளார்.

  ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கைது செய்வததை  தவிர்க்கவும், விசாரணை நடவடிக்கைகளை தற்காலிகமாக இடை நிறுத்துமாறும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பதில்  பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து மூலமாக அறிவறுத்தியுள்ளார்.  யாரை கைது செய்ய வேண்டும், எந்த விசாரணைகளை இடை நிறுத்தம் செய்ய வேண்டும் என் று பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடையாது.

வேட்பாளர் குற்றவாளி என்று உறுதிப்படுத்தப்பட்டாலோ,  சந்தேகிக்கப்பட்டாலே அவர் கைது செய்யப்பட வேண்டும் . இதில் அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்த முடியாது. தேர்தல் ஆணைக்குழு அரசியல்வாதிகளுக்கு சார்பாக செயற்படுகிறது. சுயாதீனம் என்ற நாமத்தை வைத்துக் கொண்டு ஒரு சில ஆணைக்குழுக்கள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறது. இந்நிலைமை மாற்றியமைக்கப்படும் என்றார்.

1 comment:

  1. இவர்ட மனைவியை கைது செய்ய வைத்து மற்றவர்களை கைது செய்யபட முனைவது எல்லாமே திட்டமிட்ட நாடகமே!

    ReplyDelete

Powered by Blogger.