ஹோமாகம வீட்டின் இரகசிய அறையில், பெருமளவு ஆயுதங்கள் மீட்பு - வீட்டு உரிமையாளரான பெண் கைது
ஹோமாகம, பிட்டிபன 4 வது அவென்யூ பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டில் இரகசிய அறையொன்றில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நான்கு தோட்டாக்கள், 7.7 மிமீ தோட்டாக்கள், 7 கையெறி குண்டுகள், இரண்டு புல்லட் ப்ரூஃப் ஆடை மற்றும் 04 அடையாளம் தெரியாத தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஹோமகமவில் ஜூன் 29 அன்று வர்த்தக நிலையமொன்றில் துப்பாக்கி மீட்கப்பட்டதுடன், வர்த்தக நிலைய உரிமையாளர் அவரது மனைவி, பணியாளர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
வர்த்தக நிலைய உரிமையாளருடன் தொடர்பை பேணிய பெண்ணொருவரின் இல்லத்திலேயே நேற்று சோதனை நடத்தப்பட்டது. அவர் 2013 ஆம் ஆண்டில் 50 மில்லியன் ரூபாவிற்கு வீட்டை வாங்கி அந்த பெண்ணை குடியேற்றினார். திருமணமாகாத அந்த பெண், தனது சகோதரியின் 2 பிள்ளைகளுடன் அங்கு குடியிருந்தார்.
வீட்டிலிருந்த ஆயுதங்கள் பற்றி தனக்கு எதுவும் தெரியாதென பெண் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணிற்கு வீடு வழங்கப்படுவதற்கு முன்னரே ஆயுதங்கள் அங்கு மறைத்து வைக்கப்பட்டதா என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
Post a Comment