ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் சிறப்பான வெற்றியை பெறுவதற்கு உதவுவதாக மக்கள் உறுதி
பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் இன்று (25) மாத்தறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், கம்புறுப்பிட்டிய சந்தை வளாகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோதே மக்கள் இவ்வாறு தெரிவித்தனர். அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். கம்புறுப்பிட்டியவை புதிய நகரமாக அபிவிருத்தி செய்தல், 2019 சிறுபோகத்தின்போது நெல் அறுவடைக்கு வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்டஈடு வழங்குதல், கம்புறுப்பிட்டிய கரந்தெனிய பாடசாலையின் விளையாட்டரங்கு, சுற்றுமதில் நிர்மாணம், கறுவா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திக்கு உதவுதல் உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ஹக்மன நகரில் முறையற்ற பஸ்போக்குவரத்து, காணிகளுக்கு உறுதிகள் இல்லாமை மற்றும் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு பிரதேசத்திற்கு தொழிற்சாலை ஒன்றை அமைப்பதன் தேவை குறித்து ஹக்மன மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் இவற்றில் அடங்கும். அபேட்சகர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஹக்மன நகர மண்டப வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் இத்தேவைகளை முன்வைத்தனர்.
அபேட்சகர் நிரோஷன் பிரேமரத்ன முலட்டியன பிரதேச சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். இங்கு வருகை தந்திருந்த முலட்டியன பிரதேச மக்கள் கித்துல் கைத்தொழிலுக்கு அனுமதியளிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் எடுத்த நடவடிக்கை குறித்து பாராட்டு தெரிவித்தனர்.
அபேட்சகர் சரத் டி அல்விஸ் ஹக்மன பஸ்கொட ஊறுபொக்க பொது விளையாட்டரங்கிலும் அபேட்சகர் வீரசுமன வீரசிங்க தெனியாய புதிய சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். தெனியாய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வைத்தியசாலையின் பணிகளை விரைவாக நிறைவு செய்து தருமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
அபேட்சகர் கருணாதாச கொடிதுவக்கு அக்குரஸ்ஸ நகரில் தனது வீட்டில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றியதுடன், தேர்தலின் பின்னர் அக்குரஸ்ஸ புதிய நகரத்திட்டம் மற்றும் வெள்ள தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தி பழைய நெல் வயல்களை அறுவடை செய்யக்கூடியதாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
மஹிந்த யாப்பா அபேவர்தன வெலிகம கடற்கரை பஸ் தரிப்பிடத்திற்கு அருகே ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் பங்குபற்றிய ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.
மொஹான் கருணாரத்ன
பணிப்பாளர்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.07.25
medal srilankan
ReplyDeletedont vote following party
podjana paramuna -rajpaksa thugs party
unp ranil fox
slfp -mithree donkey