Header Ads



சஜித்துக்கும் ஜலனிக்கும் குழந்தைகள் இல்லை என தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு எதிராக ஆர்ப்பாடம்


ஒரு நாட்டின் தலைவராகயிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச முழுபெண்ணினத்தையும் அவமதிக்கும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் வேதனைப்படுத்தியுள்ளார். கட்சி இன மத பேதம் இன்றி அனைவரும் இந்த கருத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர  தெரிவித்தார்.

சஜித்துக்கும் ஜலனிக்கும் குழந்தைகள் இல்லை என பிரதமர் மஹிந்த அண்மையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே நேற்று ஆர்ப்பாடம் ஒன்று முன் னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தல் பிரசார கூட்டமொன்றில் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோரை விசனப்படுவதும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சத்தி கட்சியை பிரதி நிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் உட்பட பெண்கள் அமைப்புக்கள் பல கலந்து கொண்டு நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தின் முன்னாள் அமைதியான முறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு  ஹிரு ணிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான கருத்தைத் தெரிவித்து முழுப் பெண் இனத்தையும் வேதனைப்படுத்தியுள்ளார். கட்சி இன மத பேதம் இன்றி அனைவரும் இந்த கருத்தினால் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான கருத்துக்கள் மூலம் அவர் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் முன்னுதாரணம் என்ன ? இந்த கருத்து ஒரு பெண் அல்லது தம்பதியர் மீது மாத்திரம் கூறப்பட்ட தாக நாம் கருதவில்லை. குழந்தை பாக்கியம் அற்ற அனைத்து பெண்கள் மீதும் முன்வைக்கப்பட்ட விமர்சன மாகவே கருதுகின்றோம்.

இவ்வாறான தனிப்பட்ட கருத்துக்களை அரசியல் மேடை களில் மாத்திரமல்ல. பொது மேடைகளிலும் தெரிவிப் பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அனைவரிடமும் கோருகின்றோம் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.