Header Ads



முஸ்லீம்களின் வாக்களிப்பை குறைப்பதற்கு, பல நாடகங்கள் இடம்பெறுகின்றன- ஹக்கீம் எச்சரிக்கை


ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் தாக்கம் செலுத்தும் என தெரிவிக்கப்படுவது தவறு என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய கட்சியின் 95 வீதமான உறுப்பினர்களையும் ஐந்து தலைவர்களையும் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியே தேர்தலில் வெற்றிபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டி தெகியங்கவில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில்ஹக்கீம் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கியமக்கள் சக்தியின் கூட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொள்கின்றனர் என தெரிவித்துள்ள ஹக்கீம் இது ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை என்ற பெயரில் அரசாங்கம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் அதிக முக்கியத்துவத்தை வழங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெறுவது குறித்து கவனம் செலுத்துகின்றனர் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தற்போது தமக்குள்ள வாக்கு வங்கியை காப்பாற்ற நினைக்கின்றனர்,நாடாளுமன்றத்தில் முஸ்லீம் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு முயற்சி செய்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மக்கள் புத்திசாலிகள் அவர்கள் இந்த வலையில் விழமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திலும் சர்வதேச அரங்கிலும் துணிச்சலாக தமது கருத்துக்களை முன்வைக்ககூடிய அரசியல் தலைமைத்துவம் நாட்டுக்கு அவசியம்,ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்பிரேமதாச அவ்வாறான தலைவர்கள் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும்நிலையை உருவாக்குகின்றார் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களை அவமதிப்பதற்கும் அவர்களின் வாக்களிப்பு வீதத்தினை குறைப்பதற்கும் பல நாடகங்கள் இடம்பெறுகின்றன மக்கள் புத்திசாலித்தனமாக சிந்தித்து இந்த சதிமுயற்சிகளை முறியடிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யவேண்டாம் என நாங்கள் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்தோம்,இது எங்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமான மத விடயம் என்பதால நாங்க்ள இந்த வேண்டுகோளை விடுத்தோம்.

ஆனால் அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை இதன் காரணமாக முஸ்லீம் மக்களிடமிருந்த சிறிய அனுதாபத்தையும் அவர்கள் இழந்துள்ளனர் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. The emotionally clear voice of Sri Lankan Muslims.

    ReplyDelete
  2. பாராளுமன்றத்தில் 22 அங்கத்தவர்களை வைத்திருந்து நல்லாட்சி அரசில் சாதித்தவைகள் யாவை?
    கண்டி திகன கலவரத்தை கட்டுப்படுத்த முடிந்ததா? அம்பாறையில் நடந்த அடாவடித்தனத்தை அடக்கினார்களா? மினுவாங்கொடயில் நடந்த கொலைவெறி ஆட்டத்திற்கு தீர்வு கிடைத்ததா?
    சில சூதர் பபாக்களுக்கு இன்னும் பொழுது விடியல்ல போலும்.

    ReplyDelete
  3. IMMURAI,PADUTHOLVIAI THALUVUVAAN.

    ReplyDelete

Powered by Blogger.