இலங்கையில் பதிவாகிய மிகப்பெரிய கொரோனா கொத்து, முடிவுக்கு கொண்டு வரப்பட்டது
வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான அனைத்து வீரர்களும் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இறுதியாக சிகிச்சை பெற்ற 3 கடற்படையினரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய கடற்படைய முகாமில் அடையாளம் காணப்பட்ட கொரோனா கொத்து முடிவுக்கு வந்துள்ளது.
அது இலங்கையில் பதிவாகிய மிகப்பெரிய கொரோனா கொத்தாகவே கருதப்படுகிறது. கடற்படை சிப்பாய்கள் 906 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகினார்கள்.
ஜாஎல சுதுவெல்ல பிரதேசத்தில் போதை பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது கடற்படை சிப்பாய் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தார். அவர் மூலம் பாரியளவில் கொரோனா வைரஸ் பரவியிருந்தது.
வெலிசர கடற்படை முகாமில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து கடற்படை முகாம் முழுமையாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment