முஸ்லிம் மொட்டுக்காரர்களால் சமூகத்தை, எவ்வாறு காப்பாற்ற முடியும்..?
-ஊடகப்பிரிவு-
அடித்து, அதட்டி, அச்சுறுத்தி முஸ்லிம்களிடம் வாக்குப் பெறமுடியாது எனத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத்சாலி, ராஜபக்ஷக்கள்தான் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த எதிரி என்றும் தெரிவித்தார்.
கொழும்பில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,
"ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் ஏற்பட்ட நிலைமைகளை ஆட்சிக்கு வருவதற்குப் பயன்படுத்திய ராஜபக்ஷவினர், அதிகாரத்தில் இருக்கும் காலத்திலாவது பயங்கரவாதிகளைக் கைது செய்யவில்லை. வாக்களிக்கவில்லை என்பதற்காகத்தான் இன்று ராஜபக்ஷக்கள், முஸ்லிம்களைத் துரத்தி துரத்தி நெருக்குவாரங்கள் கொடுக்கின்றனர். இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தும் தைரியம் இவர்களுடனுள்ள முஸ்லிம் மொட்டுக்களுக்கு இல்லை.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மட்டுமல்ல, அவர்களது உறவினர்களின் ஜனாஸாக்களையும் இங்குள்ள சட்டத்தரணிகள், சகபாடிகளால் நெருப்பிலிருந்து பாதுகாக்க முடியாமல் போய்விட்டது. இந்த லட்சணத்தில் முஸ்லிம் விரோதிகளிடமிருந்து, எமது சமூகத்தை இந்த முஸ்லிம் மொட்டுக்காரர்களால் எவ்வாறு காப்பாற்ற முடியும்?
சமூகத்துக்காகப் பதவிகளைப் பொருட்படுத்தாது நான்கு தடவைகள் இராஜினாமாச் செய்தவன் நான். ஆட்சி, அதிகாரங்களை அல்லாஹ்தான் தருகிறான் என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கை. தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தில், சண்டையிட்டுத்தான்.மஹிந்தவை விட்டு நான் வெளியேறினேன். தம்புள்ளை பள்ளிவாசலை சில காடையர்கள் உடைக்க வந்த போது, மஹிந்த ராஜபக்ஷவிடம் நான் எடுத்துரைத்த வேளை, "முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் கட்டுவதுதான் வேலை" என்று என்னிடம் சீறிப்பாய்ந்த அவர், அது புதிதாகக் கட்டப்பட்டது என்றார். இது பற்றி அமைச்சர் ஜனக பண்டாரவிடம் கேட்டதற்கு, '68 வருடங்கள் பழைமைவாய்ந்த பள்ளிவாசல் அது' என விளக்கிய போதுதான், மஹிந்தவின் பொய்கள் பற்றித் தெரிந்தது. மறுகணமே நான், அவரது கட்சியிலிருந்து விலகிக் கொண்டேன்.
இவ்வாறானவர்கள் 2005 முதல் இன்று வரை முஸ்லிம்களின் எதிரியாகவே உள்ளனர். முஸ்லிம் ஒருவரை இவர்கள் புதிய அரசில் அமைச்சராக்கவும் இல்லை. இந்நிலையில், இவர்களுடன் ஒட்டிக்கொண்ட முஸ்லிம் மொட்டுக்கள், இன்று வந்து ராஜபக்ஷக்களுக்காக வாக்குக் கேட்பதற்கு வெட்கம் இல்லையா? வட்டிலப்பமும், பிரியாணியும், வாக்குகளும் தருவதற்கு முஸ்லிம்கள் தயாராகவுள்ளதாக மஹிந்த சொல்கிறாரே எதற்காக?
தேசியப் பட்டியலுக்காக ராஜபக்ஷக்களின் கொடுமைகளை மறக்குமாறு கோரும் இந்த முஸ்லிம் மொட்டுக் கோமாக்காரர்கள், ராஜபக்ஷக்கள் எம்மை அழித்த போது, எரித்தபோது எங்கிருந்தனர்?
நல்லாட்சி அரசாங்கம் தனது குடும்பத்தையே பழிவாங்கியதாக இன்று நாமல் கண்ணீர் வடிக்கிறார். கள்வர்களைக் கைது செய்யாமல் கைகட்டி நிற்கவா சொல்கின்றார். எனவே, இவர்களுக்கு பாடம்புகட்ட தொலைபேசிக்கு வாக்களிக்க வேண்டும்" என்றார்.
எப்ப ஞானம் பொறந்த்தோ?
ReplyDelete
ReplyDeleteசமீபத்திய காலங்களில் முஸ்லீம் அரசியல் தலைவர்களின் ஊழல் மற்றும் மோசடிகளை ஊடகங்கள் கண்டுபிடித்து, இந்த மோசமான மற்றும் ஹூட்விங்கிங் ”முஸ்லீம் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் செயல்பாட்டு நன்மை பயக்கும் கும்பல்களை அம்பலப்படுத்திய நிலையில், முஸ்லிம் அரசியல் கலாச்சாரம் மாறத் தொடங்கியது.
முஸ்லீம் சிறுபான்மை சமூகத்தைப் பொறுத்தவரை, இப்போது உண்மைதான், அவர்கள் இந்த “MUNAAFIKK மற்றும் DECEPTIVE MUSLIM POLITICIANS” ஆல் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பவில்லை. எஸ்.எல்.எம்.சி மற்றும் ஏ.சி.எம்.சி எம்.பி.க்கள் இப்போது தங்கள் சொந்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும், மேலும் புதிய அரசாங்கமான இன்ஷா அல்லாஹ்வை ஆதரிக்க முடிவு செய்ய வேண்டும். 1948 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் எங்களுக்கு சுதந்திரம் வழங்குவதை தாமதப்படுத்த முயன்றதை அடுத்து, பெரும்பான்மை சமூகத்தை நம்பிய எங்கள் முன்னோடிகளைப் போல முஸ்லிம்களான நாம் ஒரு முன்மாதிரி வைக்க வேண்டும். டாக்டர் டி.பி. ஜெயாவின் பங்கு நினைவுகூர இந்த நேரத்தில் மிக முக்கியமானது, ஏனென்றால் அவர், அல்லது அந்த நேரத்தில் ஆங்கிலேயருடன் இருந்த முஸ்லீம் சமூகம், இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவது ஒத்திவைக்கப்பட்டிருக்கும். சிறுபான்மையினர் சிங்கள, தமிழர்கள், முஸ்லிம்கள் சுதந்திரம் கேட்கும் ஒரு ஐக்கிய முன்னணி இருப்பதாக ஒப்புக் கொண்டதால் தான். ஆனால் ஒரு மனிதன் அதற்கு எதிராக இருந்தான். அது ஜி ஜி பொன்னம்பலம். ஐம்பது ஐம்பதுக்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் மட்டுமே நான் புள்ளியிடப்பட்ட வரிசையில் கையெழுத்திடுவேன் என்று அவர் கூறினார். அதாவது சிங்களவர்களுக்கு 50% இடங்களும் சிறுபான்மையினருக்கு 50% இடங்களும் உள்ளன. அதற்கு நீங்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே, டி எஸ் சேனநாயக்கத்திடம், சுதந்திரத்திற்கான அழைப்பை நான் ஆதரிப்பேன். இதன் மூலம் டி.பி.ஜயா ஜி ஜி பொன்னம்பலத்தின் ஐம்பது ஐம்பது ”அழுகையை முற்றிலுமாகக் குறைத்தார். அதுதான் ஐம்பது ஐம்பது பேரின் மரண முழக்கம் ”. அந்த நேரத்தில் ஜெயா ஐம்பது ஐம்பது ”கூக்குரலில் சேர்ந்திருந்தால், சுதந்திரம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும். சிங்களம் என்ற சொல் கூட அரசியல் அகராதியிலிருந்து அழிக்கப்பட்டது என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும். S W R D பண்டாரநாயக்க சிங்கள மகா சபாவின் யோசனையைத் தள்ளிவிட்டார், அவர் முதலில் ஐ.நா.வில் சேர்ந்தார், பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியை அமைத்தார், அதுவும் இன அர்த்தங்களைக் கொண்டிருக்கவில்லை. வகுப்புவாத கட்சிகள் எதிர் உற்பத்தி என்று எல்லோரும் உணர்ந்தனர். ஒரு புதிய அரசியல் சக்தி ”இது நேர்மையான மற்றும் நேர்மையானதாக இருக்கும், இது சுத்தமானதாக இருக்கும்” மற்றும் முஸ்லீம் சமூகத்தை அரசியல் ரீதியாகவும், இல்லையெனில், குறிப்பாக இளைஞர்களிடமிருந்தும் எழுந்திருக்க வேண்டும், மற்றும் இந்த புதிய 2/3 பெரும்பான்மை சிங்கள குடிமக்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கீழ் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தை முஸ்லிம் அரசியல் சக்தி ஆதரிக்க வேண்டும், Insha Allah.
Convener - "The Muslim Voice".