Header Ads



விஜேதாச ராஜபக்ச போன்ற, தேசத்துரோகிகளுக்கு, வாக்களிக்க வேண்டாம் - சம்பிக்க



எதிரணியில் இருந்தாலும் பொதுஜன பெரமுனவில் பல ஆதரவாளர்கள் இருப்பதாகவும் விஜேதாச ராஜபக்ச போன்ற சந்தர்ப்பவாத தேசத்துரோகிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவர்களிடம் கேட்டுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்ச என்ற அரசியல்வாதி பற்றி பேசவும் விரும்பவில்லை. நானே நீதியமைச்சர், ராஜபக்சவினரை சிறையில் அடைக்க எனக்கு வாக்களியுங்கள் என்று 2015 ஆம் ஆண்டு கூறினார். தற்போது அந்த பக்கத்திற்கு சென்று, நான்தான் ராஜபக்சவினரை காப்பாற்றினேன். நானே சட்டத்தை வளைத்தேன் என்று கூறி தனக்கு வாக்களிக்குமாறு கோருகிறார்.

விஜேதாச ராஜபக்சவுக்கு பட்டப்படிப்புக்கான சான்றிதழ் எங்கிருந்து கிடைத்தது என்று உதய கம்மன்பில கேட்ட கேள்விக்கு இதுவரை விஜேதாச பதிலளிக்கவில்லை.

தற்போது ராஜபக்சவினரை போற்றி புகழ்ந்து வரும் உதய கம்மன்பில ஜாதிக ஹெல உறுமயவில் இருக்கும் போது, கோட்டாபய நந்தசேன ராஜபக்சவை, “கொனா (மாடு) ராஜபக்ச” எனக் குறிப்பிட்டார் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.