பிரதமர் மகிந்த கலந்துக்கொண்ட கூட்டத்தில், அமைச்சர் நிமல் சில்வாவுக்கு ஹூ கோஷம்
இந்த கூட்டம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்ச பதுளை மாவட்டத்தில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் விருப்பு வாக்கு இலக்கங்களை அறிவித்து உரையாற்றியுள்ளார்.
அப்போது நிமல் சிறிபால டி சில்வாவின் பெயர் மற்றும் விருப்பு வாக்கு இலக்கத்தை கூறும் போது கூட்டத்தில் இருந்தவர்கள், அதற்கு எதிராக ஹூ கோஷமிட்டுள்ளனர். இதனையடுத்து பிரதமர் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக கூட்டங்களின் போது சில வேட்பாளர்களை இலக்கு வைத்து இவ்வாறான கோஷங்கள் அடிக்கடி எழுப்பப்பட்டு வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்துக்கொள்ளும் கூட்டங்களில் கூட இவ்வாறு எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment