இம்முறை கல்முனை தொகுதியை, வெற்றிகொண்டு வரலாற்றுச் சாதனை படைப்போம் - ஹமீட்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி இம்முறை கல்முனை தொகுதியை வெற்றி கொண்டு வரலாற்றுச் சாதனை படைக்கும் என்று மக்கள் காங்கிரஸின் திகாமடுள்ள மாவட்ட முதன்மை வேட்பாளரும் கட்சியின் ஸ்தாபக செயலாளர் நாயகமுமான சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்தார்.
தனது கல்முனை அலுவலகத்தில் இன்று (03) இடம்பெற்ற விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
கடந்த தேர்தலில் எவ்வித அதிகாரமும் இல்லாது அம்பாரை மாவட்டத்தின் சகல ஊர்களுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வியாபிக்கச் செய்ததன் ஊடாக பெரும் வெற்றியை நாம் கண்டோம். காலடி எடுத்து வைத்த முதல் தடவையிலேயே 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை எமது கட்சி பெற்றது ஒரு சாதனையாகும். மறைந்த தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு அம்பாரை மாவட்டத்தில் இழந்த உரிமைகளையும், நடைபெறாத அபிவிருத்திகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு மாற்று அரசியல் சக்தி இல்லாமல் இருந்த காலகட்டத்தில்தான் நாம் கட்சியை அம்பாரையில் அறிமுகப்படுத்தியபோது பல சவால்களை எதிர்கொண்டு இன்று முழுமையாக மாவட்டத்தின் சகல ஊர்களும் எம்மீது நம்பிக்கை கொண்டு ஜனநாயக அரசியல் மாற்றத்திற்காக எம்மை ஆதரிக்க முன்வந்துள்ள நிலை ஒரு சாதனையாகும்.
இதனால் இம்மாவட்ட மக்களுக்கு, நாம் இம்முறை தேர்தலில் சிறந்தவர்களை பாராளுமன்றம் அனுப்புவதனுாடாக இம்மக்கள இழந்தவற்றை இயலுமானவரை பெற்றுக்கொடுக்க முனைவோம். அதற்காக அணைத்து அம்பாரை மாவட்ட மக்களும் எம்முடைன் கைகோர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதோடு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வெற்றியின் பங்காளர்களாக அணைவரும் மாற வேண்டும் என்றும் கூறினார்.
(எஸ்.அஷ்ரப்கான்)
றிசாத்தை மீண்டும் வழக்கில் தள்ளும் திட்டம் உண்டோ?
ReplyDeleteசட்ட முதுமானி என்றெல்லாம் பெயருக்கு முன்னால் எவருமே போடுவதில்லை அது நாகரீகமாக இதுவரை எவராலும் பின்பற்றப்படவுமில்லை "நிறைகுடம் தளம்பாது"
ReplyDelete
ReplyDeleteசகோதரர் ஹமீத்,
ரிஷாத் பதியுதீன் உங்களுக்கு 2015 ஆம் ஆண்டில் ஒரு தேசிய பட்டியல் எம்.பி. பதவியை வழங்க மறுத்ததை அடுத்து நீங்கள் அவதூறாக பேசியீர்கள். நீங்கள் ரிஷாத்துடன் இருந்ததால், உங்களுக்கு பல உயர் அரசு சாட்டூட்டரி போர்டு நியமனங்கள், உத்தியோகபூர்வ கார் மற்றும் சலுகைகள் கிடைத்தன. முஸ்லீம் காங்கிரஸ் அவர்களை ஆதரிப்பதற்கான உங்கள் ஆலோசனையை கருத்தில் கொள்ளாததால் இப்போது நீங்கள் ACME இல் சேர்ந்துள்ளீர்கள். உங்களைப் போன்ற ஒரு "ஏமாற்றும் ஹூட்விங்க்" முஸ்லீம் சந்தர்ப்பவாதியை முஸ்லிம்கள் எவ்வாறு நம்பலாம்? திகமதுல்ல வாக்காளர்கள் நிச்சயமாக உங்களை நிராகரிப்பார்கள், இன்ஷா அல்லாஹ்.
Convener "The Muslim Voice".
U are not to be truster.u would anything to protect selfishness.u were against forming an alliance to contest.u are directly or indirectly is going to be responsible for reducing the number of Muslims MPs elected to the parliament m
ReplyDeleteCongratulations.....
ReplyDelete