இலங்கைக்கான பயண கட்டுப்பாடுகளை நீக்கியது பிரித்தானியா
இதன்படி, ஜூலை 24 முதல், அத்தியாவசியமற்ற அனைத்து சர்வதேச பயணங்களுக்கும் எதிரான ஆலோசனையிலிருந்து இலங்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றின் அபாயங்களின் தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய நாட்டினருக்கு பெரும்பாலான நாடுகளுக்கு அத்தியாவசியமான சர்வதேச பயணங்களைத் தவிர்த்து பிரித்தானிய வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் அறிவுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment