சவுதி மன்னரின் உடல்நிலை சீராக உள்ளது -bகுவைத், பஹ்ரைன், ஜோர்டான் தலைவர்கள் நலன் விசாரிப்பு
சவுதி மன்னர் சல்மானின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து சவுதி அரசு ஊடகம் தரப்பில், ''சவுதி மன்னர் சல்மானுக்குப் பித்தப்பையில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தலைநகர் ரியாத்தில் அமைந்துள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளது. அவர் நலமுடன் இருக்கிறார்’’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் குவைத், பஹ்ரைன், ஜோர்டான் நாட்டுத் தலைவர்கள் மன்னர் சல்மானுடன் அவரது உடல் நிலை குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்ததாக சவுதி அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
சவுதி மன்னர் சல்மான் கடந்த மார்ச் 19 ஆம் தேதி கரோனா பரவல் தொடர்பாக பொதுமக்களிடம் தொலைக்காட்சி ஊடகம் வாயிலாகப் பேசினார். இதனைத் தொடர்ந்து சல்மான் எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
கரோன பரவல்
சவுதியில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. அதேசமயம் மக்களுக்குத் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.
சவுதியில் இதுவரை 2,55,825 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,557 பேர் பலியாகி உள்ளனர்.
Post a Comment