மோட்டார் சைக்கிளில் பயணித்த புதுமணத் தம்பதியினருக்கு 85,000 ரூபா அபராதம்!
பொலிஸாரின் உத்தரவை பொருட்படுத்தாமல் வீதி போக்குவரத்து விதிகளை மீறி, மோட்டார் சைக்கிளில் பயணித்த மணமக்களுக்கு 85,000 ரூபாவை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய மாவட்ட நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த புதுமணத்தம்பதியினர் கண்டி – மஹியங்கனை ஏ26 வீதியில் ஹுன்னஸ்கிரிய நகருக்கு அண்மையில் வீதி விதிகளை மீறி பயணித்துக் கொண்டிருந்தபோது, அவர்களை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் குறித்த தம்பதியினரை கைதுசெய்துள்ளனர்.
தெஹியத்தகண்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த புது மணத்தம்பதியினர், தமது திருமண நிகழ்வு நிறைவடைந்ததன் பின்னர் இவ்வாறு ஊர்வலமாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
அத்துடன், இவ்விருவரும் சாரதி அனுமதிப் பத்திரத்தை கொண்டிருக்கவில்லை என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், எட்டு வீதி விதிகளை மீறியுள்ளதாக பொலிஸாரால் பீ அறிக்கையின் ஊடாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, தெல்தெனிய மாவட்ட நீதிபதி ஷானக கலன்சூரிவினால் 85,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
Post a Comment