ஜூலை 6 முதல் சுவிட்சர்லாந்தில் இது கட்டாயம் - கொரோனா 2 வது அலையை தடுக்க அரசு நடவடிக்கை
சுவிட்சர்லாந்தில் வரும் திங்கட்கிழமை (ஜூலை 6) முதல் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் பேரணிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மட்டும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது.
தற்போது அத்துடன் பொதுப்போக்குவரத்தும் இணைக்கப்பட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜூன் மாதம் மத்தியிலிருந்து கொரோனா தொற்றுக்காளாகுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து பொதுப்போக்குவரத்தில் மாஸ்க் அணிவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறை அமைச்சரான Alain Berset கூறும்போது, நாட்டில் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவதையடுத்து, இப்போது ஊரடங்கும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை உருவாவதை தடுப்பதற்காக மாஸ்க் அணிவது கட்டயமாக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆகவே, ஜூலை 6ஆம் திகதி முதல் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவோர் கட்டாயம் மாஸ்க் அணியவேண்டும்.
12 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் மாஸ்க் அணியவேண்டும். 12 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாஸ்க் அனிவது கட்டாயமில்லை.
மாஸ்க் அணியாவிட்டால் நீங்கள் ரயில் அல்லது பேருந்திலிருந்து இறக்கிவிடப்படுவீர்கள்.
தற்போதைக்கு மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் கிடையாது, ஆனால், மாஸ்க் அணிய மறுத்து விவாதத்தில் ஈடுபட்டால், விதிக்கு கீழ்ப்படியாததற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
Post a Comment