Header Ads



கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தில் மோதல் - 5 பேர் படுகாயம்

கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தில் தொற்றுக்குள்ளான இரண்டு தரப்பினருக்கு இடையில் மோதல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று -01- இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதலில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரவித்துள்ளனர்.

இவர்கள் சிகிச்சைக்காக வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களாகும். எனினும் அவர்களது நிலைமை தீவிரமாக இல்லை என பொலநறுவை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இந்திக்க குமார தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு மற்றும் சேனபுர பிரதேசத்தில் அமைந்துள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் இரண்டு தரப்பிற்கு இடையிலேயே இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.

கந்தக்காடுவில் உள்ள புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட 279 நோயாளிகளும் வெலிந்த சேனபுர பிரதேசத்தில் அமைந்துள்ள புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் 84 பேரும் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களின் குழுக்கள் இரண்டிற்கு இடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அங்கிருந்த பொருட்களை கொண்டு தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்..

No comments

Powered by Blogger.