Header Ads



3 ஜனாதிபதிகளின் பங்களிப்புடன் அரசாங்கம் உருவாகும் - மைத்திரி


எதிர்வரும் ஆகஸ்ட் 5ஆம் திகதிக்கு பின்னர் மூன்று ஜனாதிபதிகள் பங்களிப்பு வழங்கும் நிலையான அரசாங்கம் உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திம்புலாகலை - பந்தனாகலை மகாவலியே பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்தியில் 99 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள அபிவிருத்தி பணிகள் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்கப்படும்.

எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் பொலன்னறுவை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 10 ஆண்டு திட்டம் அமுல்படுத்தப்படும். இதற்கான எனது நண்பர்களான பேராசிரியர்கள் குழு உதவும்.

தேர்தலின் பின்னர் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித்திட்டங்கள் துரிதப்படுத்தப்படும். நாட்டின் இளையவர்களுக்கு விவசாயம், கடல், விமான தொழிற்நுட்பம் மற்றும் அறிவியல் துறையில் தொழில்களை உருவாக்க விசேட திட்டங்கள் உள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவுக்கு அமைய பொலன்னறுவையில் எனது பெயர்கள் இருக்கும் நினைவு பலகைகள் மூடப்பட்டு வருகின்றன.

முடிந்தால், மொரகஹாகந்தை நீர்த்தேக்கத்தை கடதாசியை ஒன்றை கொண்டு மூடுங்கள். பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையில் பொலித்தீனை கொண்டு மூடுங்கள். பலகைகளில் இருக்கும் எனது பெயர்களை மூடினாலும் பொலன்னறுவை மாவட்ட மக்களின் மனங்களில் இருந்து எனது பெயரை எவராலும் மூட முடியாது.

மன்னர் ஆட்சிக்காலத்தின் பின்னர் சந்திரிக்காவின் அரசாங்கம், மகிந்த ராஜபக்சவின் மற்றும் எனது ஆட்சியின் போது பொலன்னறுவை மாவட்டத்திற்கு பாரிய அபிவிருத்திகளை என்னால் செய்ய முடிந்தது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.