போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு பேணிய 2 அதிகாரிகளின் 7 வாகனங்கள் பறிமுதல்
போதைப்பொருள் கடத்தல் காரர்களுடன் தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு சொந்தமான ஏழு வாகனங்கள் பல்லெவெல பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பொலிஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான நான்கு லொறிகள், இரண்டு வேன்கள் மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவை நேற்று மாலை கம்பஹா, பல்லெவெல பகுதியில் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் அனைத்தும் பல்லெவெல, பந்துரங்கொடை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Post a Comment