150 ஆசனங்களை கைப்பற்ற முயற்சிகின்றோம், தொண்டையில் இரத்தம் வரும்வரை பேசியுள்ளேன் -
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு இல்லை என அந்த கட்சியின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாக சிலர் ஊடகங்கள் வாயிலாக கூற முயற்சித்தாலும் அடிப்படைவாத தலைவர்களுடன் எந்த சந்தர்ப்பத்திலும் தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாரில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
கம்பஹா அத்தனகல்லையில் இன்று 21 நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிலருடன் இணைந்து நாங்கள் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க போவதாக சிலர் ஊடகங்களில் கூற முயற்சித்து வருகின்றனர். தேசிய அரசாங்கத்தை அமைக்க போவதாக கூறுகின்றனர். அடிப்படைவாத அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாரில்லை என்பதை தெளிவாக கூறுகிறேன்.
நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக 150 ஆசனங்களை கைப்பற்ற முயற்சித்து வருகின்றோம். இதனை நான் தொண்டையில் இரத்தம் வரும் வரை பல முறை பேசியுள்ளேன். பொதுஜன பெரமுனவில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவர்கள் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அல்ல.
எமது வாக்குகளை பெற்று வெற்றியீட்டி, உள்ளே வந்து, அணியை உருவாக்கிக்கொண்டு வாக்குகளை காட்டி எம்மை ஆட்டி வைக்க றிமோர்ட் கொன்ரோலை கையில் வைத்துக்கொள்வார்கள் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என்பதற்கு இந்தக் காவியும் விதிவிலக்கல்ல.
ReplyDelete