10 பெண்கள் ஒன்றிணைந்தாலே போதும், கருணாவை விரட்டி அடிக்கலாம்
அம்பாறை - திருக்கோவில் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம் சமுகத்திற்கு பலவிதமான இழப்புக்களை ஏற்படுத்தி எம்மையெல்லாம் தலைகுனியவைத்து தமிழர் என்ற சொல்லுக்கு களங்கமேற்படுத்திய ஒருவர் இந்த மாவட்டத்தில் களமிறங்கியுள்ளார்.
அவர் எம்மை மிகவும் வஞ்சித்து பேசுகின்றார்.அவருக்கு தகுந்த பாடத்தை புகட்டவேண்டுமென பெண்கள் கூறுகின்றனர். 10 பெண்கள் ஒன்றிணைந்தாலே போதும் அவரை இங்கிருந்து அவரது மாவட்டமான மட்டக்களப்பிற்கு விரட்டிவிடலாம்.
அங்கேயும் கூட அவரால் தனது பணிகளைச் செய்யமுடியாது. அவர் அங்கிருக்கும் மக்களால் நிராகரிக்கப்பட்டுத்தான் இங்கு வந்துள்ளார் என்று கூறியுள்ளார்.
கலையரசன் இவ்வாறு மறைமுகமாக கருணாவைத்தான் கூறியுள்ளார் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
பத்துப்பேர் தேவையா?
ReplyDelete