கம்பஹா மாவட்டத்தில் 1 இலட்சத்து 25 ஆயிரம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன
பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் வாக்களித்த தகுதிபெற்ற சிறுபான்மை மக்கள் ஒரு இலட்சத்தி 75ஆயிரம் பேர் உள்ள நிலையில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் சிந்தித்துச் செயற்பட்டால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை தொகுதியில் கல்லொளுவைக் கிராமத்தில் முஸ்லிம் சமூகத்தினருடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டத்தரணி நியாஸ் முஹம்மத் தலைமையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில்
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது: நாட்டிலுள்ள 22தேர்தல் மாவட்டங்களில் அதி கூடிய வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் காணப்படுகின்றது. இம்மாவட்டத்தில் 18இலட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஒரு இலட்சத்து 75ஆயிரத்துக்கும் கூடுதலான சிறுபான்மை வாக்குகள் உள்ளனர். 56ஆயிரம் இந்து கத்தோலிக்க சமூகங்களின் வாக்குகளும் ஒரு இலட்சத்து 25ஆயிரம் முஸ்லிம் வாக்குகளும் உள்ளன.
சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுபட்டு சிந்தித்து செயற்பட்டால் எம்மால் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை வென்றெடுக்க முடியும். கடந்த காலங்களில் நாம் பிரிந்து செயற்பட்டதன் காரணமாக எமக்கான பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியாது போனமை துரதிஷ்டவசமானதாகும்.
எம். ஏ.எம். நிலாம்
முஸ்லீம் சமுகம் தாங்கள் வாக்களிக்கும் கட்சியிடம் சமூக அபிவிருத்திக்கான ஒப்பந்தங்கள் செய்து கொண்டு வாக்களிக்க வேண்டும் .அப்படி செய்யாவிட்டால் ஏமாற்றப்படுவார்கள் .
ReplyDelete50ஆயிரத்திற்கும் குறைவான தமிழ் வாக்குகளை கொண்டுள்ள தமிழ் சமூகம் முஸ்லிம்களின் முதுகில் சவாரி செய்யப்பார்க்கின்றது. அதுவும் இனவாதி மனோ கணேசனின் கட்சியில் போட்டியிடும் ஒருவரை அனுப்பி முஸ்லிம்கள் கொள்ளிக்கட்டையால் முதுகை சொரிந்துகொள்ள வேண்டுமா?
ReplyDelete