ஒவ்வொரு நாளும் புதிய, உச்சத்தை அடையும் கரோனா தொற்று: WHO
ஓவ்வொரு நாளும் கரோனா தொற்று புதிய உச்சம் அடைவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட தகவலில் ,” ஓவ்வொரு நாளும் கரோனா தொற்று புதிய உச்சத்தை அடைகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,83,000க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் அனைத்து உலக நாடுகளையும் அடிப்படை உலக சுகாதார நடவடிக்கைகளை இரட்டிப்பாக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கரோன பரிசோதனைகளை துரிதப்படுத்துங்கள். சுகாதார பணியாளர்கள் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
பொது மக்கள் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். கைகளை தொடர்ந்து சுத்தமாக வைத்திருங்கள். மாஸ்க் அணியுங்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91,00,994 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 49 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
இந்நிலையில் டெக்ஸாமெதாசோன் ஸ்டெராய்ட் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 35% பேரையும் கூடுதல் பிராணவாயு தேவைப்படும் கரோனா நோயாளிகளில் 20% பேர் மரணங்களைத் தடுத்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கூறியிருந்தனர்.
இந்த நிலையில் டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment