Header Ads



சஜித் அமைச்சுப் பதவிகளைத் துறக்காமல் இருந்திருப்பாராயின் இன்றும் UNP தான் ஆட்சியில் இருந்திருக்கும் - பைரூஸ் ஹாஜியார்

வெற்றி தோல்வி என்பது சகஜமானதாகும்.  இந்நாட்டின் அரசியலமைப்பை; பொறுத்தவரையிலும்  இன்று வரைக்கும் இந்நாட்டின் பிரதமராக ரனில் விக்கிரமசிங்கதான்  இருக்க வேண்டும்.  பாராளுமன்றத்தில் அதிகளவு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களே  இருந்தார்கள். எனினும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்து விட்டார் என்று உறுதியான முடிவு வரும் முன்னர் அல்லது தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக  அறிவிக்கும் முன்  சஜித் பிரேமதாச பதவியில் இருந்து விலகினார். ஒரே நாளில் 16 பேர் அளவில் அவர் அணியைச் சார்ந்தவர்கள் தங்களுடைய அமைச்சுப் பதவிகளை இராஜினமாச் செய்தார்கள். அமைச்சராக கட்சியின் தவிசாளராக இருந்த கபிர் ஹாசிம் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமாப் பண்ணுமாறு வலியுறுத்தியுள்ளார். சஜித் பிரேமதாச தம் அமைச்சுப் பதவிகளைத் துறக்காமல் இருந்திருப்பாராயின் இந்நாட்டில்  இன்று வரையிலும்  ஐக்கிய தேசிய கட்சி தான் ஆட்சியில்  இருந்திருக்கும் என்று முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும் கொழும்பு மாவட்டத்தில் மத்திய தேர்தல் தொகுதி அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜியார்  வழங்கிய செவ்வி

நேர்காணல் இக்பால் அலி

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஒன்றிணைந்து காணப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியினர் இரு கூறுகளாகப் பிரிந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். எனினும்  நீங்கள் ஏன் சஜித் அணியுடன் செல்லாமல் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடக் காரணம் என்ன? 

என்னுடைய அரசியல் முகவரியை என் தாயோ தகப்பனோ அறிகப்படுத்தவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தான் அறிகமுகப்படுத்தியது. 1984 ஆம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசின் காலத்தில் சுச்சரித்தையில் வைத்து ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் பெற்றுக் கொண்டேன் 
ஆனாலும் நான் வந்து 2001 ஆம் ஆண்டில் தான் அரசியலுக்குள் நுழைந்தேன். கொழும்பு மாநகர சபைத் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பாக  போட்டியிட்டேன்.  அதன் போது 9400 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்டேன். அதன் பின்னர்  2004 ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றேன். அதில் 17000 விருப்பு வாக்குகள் பெற்று  முதன் முதலில் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன். அதைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டேன். 27000 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்டேன். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபையிலும் போட்டியிட்டேன். அதிலும் போட்டியிட்டு மீண்டும் மூன்றாவது தடவையாக  34000 விருப்பு வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்டேன். நான் ஒவ்வொரு தேர்தல்களிலும் தலா 10000 விருப்பு வாக்குகள் விகிதம் அதிகப்படி பெற்று வெற்றியடைந்துள்ளேன்.   நான் போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்றது மட்டுமல்ல வாக்குகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடியும்.  எனக்கு எப்பொழுதும்  கைகொடுப்பது மத்திய கொழும்பு மக்கள்தான். 

இவ்வாறு  தொடரேச்சியமாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதியாக இருந்து முஸ்லிம்  சமூகம் நலன் சார்ந்த விடயங்களிலும் ஏனைய மக்கள் நலன் சார்ந்த விடயங்களிலும் எண்ணற்ற அளப்பரிய பங்களிப்பைச் செய்துள்ளேன். ஜனாதிபதி தேர்தலுக்குப் பிற்பாடு   ஐக்கிய தேசிய கட்சி இரு கூறுகளாகப் பிரிந்து நிற்கின்றார்கள.; எனினும்   கொழும்பு மாவட்ட  முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச் செல்ல வில்லை.   இன்னும் அவர்கள் யானைச் சின்னத்தின் பற்றுதியுடனேயே இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாச  ஐக்கிய தேசிய கட்சியினால் நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்  ரனில் விக்கிரமசிங்க தலைமைத்துவத்தின்  ஆதரவுடன்  கட்சியின்  சகலசெயற்குழு அங்கத்தவர்களுடைய தீர்மானத்துடன் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு களமிறக்கப்பட்டவர். இதற்கு ஏனைய கட்சியினர்களும் ஆதரவு வழங்கி ஒரு பொது வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டவர்.

யார் என்ன கூறினாலும் யார் விலகிச் சென்றாலும் ஐக்கிய தேசிய கட்சியின் மூலம் அறிமுகமாகி அடையாளப்படுத்தப்பட்ட நான் அக்கட்சியின் அங்கத்தவராக இருப்பதிலும் அக்கட்சியின் ஊடாக மக்களுக்கு சேவை செய்வதில் பெருமிதம் அடைகின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சி பிளவுபட்ட நிலையில் முஸ்லிம்களுடைய நிலை குறித்து நோக்குகையில் முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற  உறுப்பினர்கள்   ஐக்கிய மக்கள் சக்தி பிரதிநிதித்துவத்தைப் படுத்தி போட்டியிடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் பரம்பரை பரம்பரையாக ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து வந்த மக்களுடைய ஆதரவு இப்;போதுத் தேர்தலில் சரிவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளதல்லவா?

ஐக்கிய தேசிய கட்சியை விட்டு பிரபல்யமான முஸ்லிம் பாராமன்றப் பிரதிநிதிகள் சென்றாலும் கூட முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை விட்டுச்  செல்லவில்லை. முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சி மீது இன்னும் பற்றுறுதியுடனே இருக்கிறார்கள் என்பது தான் யதார்த்தம். யானைச் சின்னத்துடன் தான் முஸ்லிம்கள் இருப்பார்கள்.  எதிர்வரும் தேர்தலில் இதன் உண்மை தெளிவாக வெளிப்படும். தொலைபேசி என்பது ஒரு புதிய கட்சியின் சின்னம். அது இப்போது தான் அறிகமுகம். இலங்கையைப் பொறுத்த வரையிலும் முஸ்லிம்கள் 72 வருட காலமாக ஐக்கிய தேசிய கட்சியான யானைச் சின்னத்திற்கே வாக்களித்து வருகிறார்கள். எங்களுடைய தாய் தந்தையர்கள் உட்பட இலங்கை முழுவதிலுமாக அதிகளவிலான  முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரிப்பவர்களே உள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின்  சின்னம் யானை. அதன் நிறம் பச்சை யாகும். முஸ்லிம்களும் தங்களுடைய நிறமும்  பச்சை. தேர்தலுக்கு வாக்களிக்கச் சென்றால் முதலில்  வாக்குச் சீட்டில்  யானைச் சின்னம் எங்கு இருக்கிறது என்றுதான் பார்ப்பார்கள்.  யானை இல்லாமல் விட்டாமல் தான் வேறு சின்னத்துக்கு வாக்களிப்பார்கள். நிச்சயமாக யானைச் சின்னத்துக்குத் தான் வாக்களிப்பார்கள். 

கொரோனா தொற்று விவகாரத்தில் முஸ்லிம் உயிரைத் தகனம் செய்யும் விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவின் அபிப்பிராயம் என்ன? 

வெற்றி தோல்வி என்பது சகஜமானதாகும்.  இந்நாட்டின் அரசியலமைப்பை; பொறுத்தவரையிலும்  இன்று வரைக்கும் இந்நாட்டின் பிரதமராக ரனில் விக்கிரமசிங்கதான்  இருக்க வேண்டும்.  பாராளுமன்றத்தில் அதிகளவு உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களே  இருந்தார்கள். எனினும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வி அடைந்து விட்டார் என்று உறுதியான முடிவு வரும் முன்னர் அல்லது  தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக  அறிவிக்கும் முன்  சஜித் பிரேமதாச பதவியில்  இருந்து விலகினார். அமைச்சுப் பதவியில் இருந்து இராஜனமாச் செய்தார். ஒரே நாளில் 16 பேர் அளவில் அவர் அணியிலுள்ள அமைச்சர்கள் தங்களுடைய அமைச்சுப் பதவிகளை இராஜினமாச் செய்தார்கள். அமைச்சராக கட்சியின் தவிசாளராக இருந்த கபிர் ஹாசிம் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமாப் பண்ணுமாறு வலியுறுத்தியுள்ளார். சஜித் பிரேமதாச தம் அமைச்சுப் பதவிகளைத் துறக்காமல் இருந்திருப்பாராயின் இந்நாட்டில்  இன்று வரையிலும்  ஐக்கிய தேசிய கட்சி தான் ஆட்சியில்  இருந்திருக்கும். 

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுத் தொடர்பில் முஸ்லிம் உயிரைத் தகனம் செய்யும் விவகாரம் குறித்து எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு இலகுவாகக் கிட்டியிருக்கும். முஸ்லிம்களுடைய நான்கு உயிர்கள் அநியாயமாக எரியூட்டப்பட்டு இருக்காது. அதற்கு இடமளிக்கப்பட்டிருக்காது. ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியினர் முஸ்லிம்களை ஒரு வெறுப்புணர்ச்சியுடன்  நோக்குகின்றவர்கள். அவர்கள் முஸ்லிம்களுக்கு சாதகமான காரியங்கள் எவையும் செய்யமாட்டார்கள்.  இதற்கு முழுமையான பொறுப்பைப்  கூற வேண்டியவர் சஜித் பிரேமதாச அவர்களே. அவருடன் ஏனைய கெபினட் அமைச்சர்கள் பலர் இராஜினாமாச் செய்தனர்.  சஜித் அணியினர் இராஜினமாச் செய்தமையால்  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரனில் விக்கிரமசிங்கவினால் அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எல்லோரும் பதவி துறந்த பின் ரனில் விக்கரமசிங்க மட்டும்  ஆட்சியைப் பிடித்துக் கொண்டி இருக்க முடியாது. 
ஏனென்றால் ரனில் விக்கிரமசிங்க ஆட்சியல் தொடர்ந்து பிரதமராக இருக்கக் கூடாது என்ற எண்ணத்துடன்  சஜித் பிரேமதாச கங்கணம் கட்டி செயற்பட்டார் என்று தான் கூற வேண்டும்.   ரனிலை  அலரி மாளிகைளில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும் என்ற நோக்குடன் சஜித் அணியினர் எல்லோரும் பதவி துறந்தார்கள்.  ரனில்  இயலாத வரையிலும் பொறுத்திருந்து பார்த்து விட்டு இரண்டு நாட்டுகளுக்கு பின்னர்த்தான்  பதவி துறந்தார். அவர் ஜனாதிபதியைச் சந்தித்து தன்னுடைய இராஜினமாகக் கடிதத்தை ஒப்படைத்தார். நான்கு உயிர்கள் அநியாயமாக எரியூட்டப்பட்டதற்கான  முக்கிய காரணம் ரனில் அல்ல. சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தி என்ற அமைப்பை உருவாக்குவதற்கு எடுத்த காரணம் தான் முக்கியமானதாகும். 

இன்று முஸ்லிம் அரசியல்வாதிகள் இந்த நான்கு மையத்தை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரதான முஸ்லிம் வேட்பாளர்கள் முக்கிய எடுகோளாக மையத்தை வைத்தே அரசியல் பரப்புரைகளைச் செய்து வருகின்றார்கள். ஆனால் இந்த மையம் எரியூட்டப்பட்டதற்கு அவர்களும் முக்கிய காரணம் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்றத்தில் இருந்தார்கள். அவர்கள் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கு பக்கதுணையாக இருந்திருந்தால் நிச்சயமாக ஒரு போதும் மையத்தை எரிப்பதற்கு இடமளித்திருக்கமாட்டார்கள்.  எமது கையில் இருந்து ஆட்சி இல்லாமற் போவதற்கான முக்கிய பங்கு  அவர்களுக்கே உண்டு என்று ஈண்டு குறிப்பிடலாம்.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளதா? 

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் நிச்சயமாக  ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்வோம். அதில் எந்தவொரு சந்தேகமுமில்லை. கொழும்பு மாவட்டத்தில் மத்திய தேர்தல் தொகுதியில் என்றால் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை. அங்கு  நூற்றுக்கு 54 விகிதமான வாக்குகள் முஸ்லிம்களுடைய வாக்குகளாகும். இத் தொகுதியில் 132000 வாக்குகள் உள்ளன.  கொழும்பு மாவட்டத்தில் மத்திய தேர்தல் தொகுதி அமைப்பாளர் என்ற வகையில் கணிசமானளவு முஸ்லிம் வாக்குகள் ஐக்கிய தேசிய கட்சிக்கே செல்லும். அதில் போட்டியிடும் நான் நிச்சயமாக வெற்றிபெறுவேன்.

மத்திய கொழும்பு என்பது ஐக்கிய தேசிய கட்சிக்குச் சொந்தமான இடம். முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச 1993க்குப் பின்னர் மரணித்த பிற்பாடு  சிரி சேன குரே பேரூந்து சின்னத்தில் தனித்து போட்டியிட்டார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவுடன்  வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சராகவும்  இருந்தார். கொழும்பு முதல்ராகவும் இருந்தார். கொழும்பு மாவட்டத்தில் 35000 வீடுகள் கட்டிக் கொடுத்தார். ஆனாலும் அவர் பஸ் சின்னத்தில் போட்டியிட்டு  படுதோல்வி அடைந்தார். அன்று அசாத் சாலி கூட அந்த பஸ்ஸில்  ஏறிப் போனவர்களில் ஒருவர்தான்.  அதில் முக்கியமானவர்கள் ஏறிப் போனார்கள். அவர்கள் எந்தப் பயனையும் அடையவில்லை. விசேடமாக அவர்கள்  இலங்கை முழுவதிலும்  போட்டியிட்டார்கள். ஆனால் அவர்கள்  ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒன்றைக் கூடப் பெற்றுக் கொள்ள முடியவில்லை.  மத்திய கொழும்பில் 1800 வாக்குகள் மட்டும் தான் அவர் பெற்றார். இதை ஏன் கூறுகின்றேன் எனில் மத்திய கொழும்பு மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தை ஆதரிப்பவர்களே உள்ளனர்.  இக்கட்சியை விடுத்து வேறு கட்சியைப் பற்றிச் சிந்திப்பதற்கு அவர்கள் முனைவதில்லை.  யார் எதைச் சொன்னாலும் கொழும்பு மாநகர சபையும் மத்திய தேர்தல் தொகுதியும் அன்று முதல் இன்று வரையிலும் யானைதான் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. 

கொழும்பு மாவட்டத்தில் 15 தேர்தல் தொகுதியில் உள்ளன.  ஒவ்வொரு கட்சியில் இருந்தும் தலா 23 பேர் விகிதம் களமிறங்கி யுள்ளனர். 19 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.  ஐக்கிய தேசிய கட்சியில்; போட்டியிடும் வேட்பாளர்களை எடுத்தால் ரனில் விக்கிரமசிங்க 40 வருட பாராளுமன்ற அரசியல் அனுபம் கொண்டவர். ரவி கருணாநாயக, பைரூஸ் ஹாஜியார், தயாகமகே. சுசில் ஹிந்தல்ம்பிடிய ஆகிய முக்கிய பல பிரமுகர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் களமிறங்கியுள்ளனர். இதில் இலகுவான முறையில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. என்னைப் பொறுத்தவரையிலும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. 

ஐக்கிய மக்கள் சக்தியில் மிகப் பிரபல்யமான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். சுஜித் பிரேமதாச, சம்பிக ரணவக்க, சஜீவ சேனசிங்க, மரைக்கார், முஜிபுர்ரஹ்மான், ஏ. எச். எம். பௌசி, ஹிருனிகா மனோ கணேசன் போன்ற மிகப் பிரயல்யமான ஒன்பது வேட்பாளர்களுடன் தொகுதி அமைப்பாளர்களும்  களமிறங்கியுள்ளார்கள். ஆனாலும் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் மூலம்  முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களை இலகுவில் பெற்றுக் கொள்வது என்பது மிகக் கடினமான காரியமாகும்.

No comments

Powered by Blogger.