UNP பிளவுபட்டுள்ளமை பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு மாபெரும் ஆசிர்வாதம்
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபட்டுள்ளமை பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு மாபெரும் ஆசிர்வாதமாக இருப்பதாக, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேதெரிவித்தார்.
கண்டி, தலாத்துஓயா பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, “கண்டி, ஹேவாஹெட்ட தொகுதியின் பிரதான நகரங்களான தலாத்துஓயா, தெல்தொட்டை மற்றும் ஹேவாஹெட்ட போன்ற நகரங்கள் கடந்த நூறு வருடங்களாக ஒரேவிதமாகவே இருந்து வருகிறது. கடந்த காலங்களில் எதுவித அபிவிருத்தியையும் காண முடியவில்லை. ஆனால், தொடர்ந்து பல மாகாண சபை அங்கத்தவர்களும் உள்ளூராட்சி சபை அங்கத்தவர்களும் இருந்து வந்துள்ளனர். இதன் காரணமாக இப்பிரதேச வாக்காளர்கள் பெரும் அதிருப்தியுடன் உள்ளனர்.
2023ஆம் ஆண்டளவில் நாம் மத்திய அதிவேக வீதியை பூரணப்படுத்த உள்ளோம். அதேநேரம் கண்டி நகரில் புதிய உள்ளூர் விமான நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. எனவே, இவ்வாறான அபிவிருத்திகளின்போது இயல்பாகவே ஹேவாஹெட்ட தொகுதி அபிவிருத்தி அடையும்” என்றார்.
விரக்தி அடைந்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் பலர், பொது ஐன பெரமுனவுடன் இணைந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment