Header Ads



பலவீனமடைந்துள்ள UNP இனி ஆட்சியை கைப்பற்றாது - ஆதரவாளர்கள் எம்முடன் இணைய வேண்டும் என மஹிந்த அழைப்பு


(இராஜதுரை ஹஷான்)

நல்லாட்சி அரசாங்கத்தில்  கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள    ஜனநாயகத்தை  உயிர்ப்பிக்க    அனைத்து தரப்பினரும் ஒன்றினைய வேண்டும்.   

அரசியல்  ரீதியில் பலவீனமடைந்துள்ள ஐக்கிய  தேசிய கட்சி   இனி ஆட்சியை கைப்பற்றாது ஆகவே  ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள்  பொதுஜன பெரமுனவுடன்  இணைந்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  அழைப்பு   விடுத்தார்.

பிங்கிரிய முருகண்டிய    பிரதேசத்தில் இடம் பெற்ற  ஸ்ரீ  லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார  கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்    பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி அதனூடாக  சிறந்த அரச  நிர்வாகத்தை செயற்படுத்துவதே எமது  எதிர்பார்ப்பாகும்.    நல்லாட்சியில் ஜனநாயக உரிமைகள்  மறுக்கப்பட்டுள்ளன. 

உரிய  காலத்தில் எந்த தேர்தல்களும் இடம் பெறவில்லை . இது  மக்களின் அடிப்படை உரிமை  செயற்பாடு என்று  குறிப்பிட  வேண்டும். ஜனநாயகத்தை    பலப்படுத்த அனைத்து  தரப்பினரும்  ஒன்றினைய வேண்டும்.

அரசியல்  ரீதியில்  ஐக்கிய தேசிய கட்சி  பலவீனமடைந்துள்ளது.  இனியொருபோதும்  இவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடியாது.

ஐக்கிய   மக்கள் சக்தியின்  நிலைமையும் இவ்வாறே  காணப்படுகின்றது.   தேர்தல் பிரசார  நடவடிக்கைகளை  பொதுஜன பெரமுன   வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது.  ஐக்கிய   தேசிய கட்சி மற்றும் ஐக்கிய  மக்கள் சக்தி ஆகியோரின் உறுப்பினர்கள்  , ஆதரவாளர்கள்   அரசியலில்  எவ்வாறான  தீர்மானங்களை எடுக்க வேண்டும் என குழப்பமடைந்துள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள்   ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் தாராளமாக  இணைந்துக் கொள்ளலாம். 

அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து   சிறந்த அரசாங்கத்தை  ஸ்தாபிக்க வேண்டும். ஜனாதிபதியின் கொள்கைத்திட்டங்களை   செயற்படுத்த வேண்டும் என்றார்.

1 comment:

  1. அப்படியானால் இனிமேல் எதிர்க்கட்சி என்று ஒன்றும் தேவையில்லை சர்வாதிகார ஆட்சியே போதும் நானே ராஜா நானே மந்திரி!!

    ReplyDelete

Powered by Blogger.