Header Ads



இலங்கையை சுபீட்சமான நாடாக மாற்ற, ரணில் தலைமையிலான பிரதமர் ஆட்சியே அவசியம் - S. சஹாப்தீன்

நவீன சவால்களுக்கு ஏற்ப சிறந்த முறையில் எமது நாட்டை கட்டி எழுப்புக் கூடியவர் தலைவர் ரனில் விக்கிரமசிங்கதான்.  அவருடைய காலத்தில் தான் ஹோமாகம தொழில் நுட்ப நகரம் ஆரம்பிக்கப்பட்டது. தற்கால கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து எம்மைப் பாதுகாத்து சுவிட்சமான நாடாகமாற்றுவதற்கு ரனில் தலைமையிலான பிரதமர் ஆட்சியே அவசியமாகும். நவீன ஹோமாகம தொழில் நுட்ப நகரை எதிர்த்தவர்களால் புதிய மாற்றத்தைக் கொண்டவர முடியாது என்று குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் வேட்பாளருமான  எஸ். சஹாப்தீன் தெரிவித்தார்.

அவர் தொடந்து கருத்து தெரிவிக்கையில்,,

ரனில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் ஹோமாகமவில் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட  தொழில் நுட்ப நகருக்கு  எதிராக செயற்பட்டவர்கள் அக்கட்டிடத்தின் பெயர்ப்பலகையை திறந்து வைத்தார்கள் என்பது ஒரு சிறந்த நாகரிகமாகக் கொள்ள முடியாது.

இந்நாட்டில் எதிர்கால கருத்திற் கொண்டு  ஹோமாகம பிட்டுபனவில்  அமைந்துள்ள  தொழில் நுட்ப நகரம் நிர்மாணிக்கப்பட்ட  போது  அரசியல் இலாபம் தேடும்  வகையில்  வரம்புகளை மீறி சகல எதிர்ப்பு   நடவடிக்கைளிலும்  ஈடுபட்டனர். இன்று  நல்லாட்சி அரசாங்கம்  நிர்மாணித்ததை தாம் நிர்மாணித்தபை;  போன்று திறந்து வைக்க  செயற்பட்டமை ஒரு சிறந்த நாகரீகமாகக் கொள்ள முடியாது.  

ஹோமகம நகரில் அமைந்துள்ள தொழில் நுட்ப நகரம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடம் திறந்து வைப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்~ மற்றும் உயர் கல்வி அமைச்சு பந்துல குணவர்தன  சென்று திறந்து வைத்தனர். 

தேர்தல் நடைபெறும் நேரத்தில் இந்த திறப்பு மேற்கொள்வதற்கான  தேர்தல் ஆணையாளருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதா  என்று முதலில் பார்க்க வேண்டும்.  இன்னும் அறிக்கை கிடைக்க வில்லை. அதற்கான ஒழுங்கு முறைகள் உள்ளன. எனினும் பல்கலைக்கழகத்திலும் பிட்டுபன ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்பட்ட விடயம் தொடர்பில் பொது மக்கள் உண்மை நிலையை அறிய வேண்டும்.

இந்த தொழில் நுட்ப எல்லாம் கொழும்பு . மொரட்டுவ பல்கலைக்கழக தொழில் நுட்ப பீடம், ஸ்ரீலங்கா டெலிகம் நிறுவனம், பிரதான உயர் கல்வி நிறுவனம், ஆதர் சீ கிலாக் நிறுவனம், பிராதான சந்திரிகா தொழில் நுட்ப மத்திய நிலையம் முதலிய இடங்களில் ஒரே நாளில் தான் அடிக்கல்கள் நாட்டப்பட்டன. இந்த தொழில் நுட்ப நிலையங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு செப்படம்பர் 22 ஆம் திகதி பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.   நகரங்களில் மிகப் பெறுமதியான பிரிவுகள் அமெரிக்காவில் சிலிகன், இந்தியாவில் பெங்களுர் ஆகிய நவீன தொழில் நுட்ப நரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இலங்கையிலும் உருவாக்குவதற்காக முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக ரணவக்க கொரியாவின் காணி மற்று பிரதான போக்குவரத்து அமைச்சர்  ஆகிய இருவரும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு இந்த தொழில் நுட்ப நகரம் மற்றும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படன. அந்த ஒப்பந்ததிற்கு இணங்க பெரும் அளவிலான செலவில் கொரியா அரசாங்கத்தினால் தொழில் நுட்ப நகரம் நிர்மாணிக்கப்பட்டது.  இந்த வேலைத் திட்டத்தின் மூலம் வீதிகள் நிர்மாணித்தல்  மின்சாரம் விநியோகம்  , 5ஜீ தொழில் நுட்பம், போக்குவரத்து வசதிகள், கட்டி நிர்மாணப் பணிகள், பூங்காவனம், திண்மக் கழிவு முகாமைத்துவம் சகல அம்சங்களும் அடங்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்டது. 

இன்றைய ஆளும் தரப்பினர் இந்த நகரம் நிர்மாணிக்கின்ற போது காணியை எடுக்கப் போவதாகக்  கூறி முழு கிராம மக்களையும்  இதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்தார்கள். ஒரு காணித் துண்டு கூட கிராம மக்களிடத்தில் இருந்து பெற வில்லை. சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். கொந்துராத்துக்காரர்களை செல்வதற்கு விட வில்லை. அளவியலாளர்கள் செல்வதற்கு வழிவிடாமல் தடுத்தாhர்கள். 2018 ஆம் ஹோமாகம பிரதேச சபையில் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. கொரியாவுக்கு காணியை விற்பனை செய்யப் போவதாக பெரும் பொய்ப் பிரச்சாரத்தை மேற் கொண்டார்கள்.  இதை சமூக மயப்படுத்தி பிரச்சாரத்தை மேற் கொண்டு அமைச்சை சுற்றி வலைத்தார்கள். 2018 ஆம் ஜனநாயக விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்றிய போது தினே; குனவர்தன நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்தார். சட்ட விரோதமான பிரதமர் மஹிந்த ராஜபக்வுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஹோமாகமவில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தொழில் நுட்ப நகர வேலைகள் நிறுத்தப்பட்டு தொழில் நகரம் ஹோமாகமவுக்கு அவசியமில்லை என்று தெரிவித்தனர். இத்தகைய நிலையில் இதைத் திறந்து வைக்கும்  நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தமை நாகரீகத் தன்மையுடையதா என வினவ வேண்டி இருக்கிறது. 

இதே போன்று 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்~ சயிட்டம் தனியார் மருத்துவ பீட பல்கலைக்கழகம் தற்போது கோத்தபாய ராஜபக்~வினால் ஆரம்பிக்கப்பட்ட தனியார் ஆசிரி பல்கலைக்கழகம் ஆகிய விடயங்களில் நாங்கள் கூடுதல் கவனம் செலுத்தினாலும் எங்களுடைய மாணவர்கள் சுயாதீன கல்வியைப் பெற்றுக் கொள்ளும் விடயத்தில்  இடையூறு விளைக்கப் போவதில்லை. இதை வைத்து நாங்கள் இலாபம் தேடப் போவதில்லை. இப்படியான இலாபகரமான செயலை கல்விக்காக ஒரு போதும் செய்யப் போவதில்லை. அரசியல் நாகரீகம் தெரிந்த தலைவர் தான் ரனில் விக்கிரமசிங்க. உண்மையான அரசியல் நாகரீகத்தை ரனில் விக்கிரமசிங்கவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. யாரப்பா இது புதுவரவு.கிளம்பிட்டான்யா மற்றுமொரு..,.

    ReplyDelete

Powered by Blogger.