'இனவாதி' என்று தேடினால், டிரம்ப்பின் கணக்கு முதலில் தென்படுகிறது
ட்விட்டர் சமூக ஊடகத்தில் 'இனவாதி' என்று தேடினால், அமெரிக்க ஜனாதிபதி டோனால்ட் டிரம்ப்பின் கணக்கு முதலில் தென்படுகிறது.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட அந்தத் தகவல் டிரம்ப்புக்கு மக்களிடையே நிலவும் எதிர்ப்பை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது. ஆனால் அது பற்றி ட்விட்டர் விரிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.
இணையத்தளத்தில் உள்ள தேடல் விதிகளின் அடிப்படையில் ஜனாதிபதி டிரம்ப்பின் கணக்கு தென்படுகிறது என்று ட்விட்டர் கூறியது.
மற்ற ட்விட்டர் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மிக அதிகமானோர் அவரை 'இனவாதி' என்று அழைத்துள்ளதால், அவரின் கணக்கு முதலிடத்தில் வந்துள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதனையொட்டி ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட கருத்துகளைப் பலரும் சாடினர். அவை இனவாதத்தையும் வன்முறையையும் தூண்டக் கூடியவை எனக் கருதி ட்விட்டர் எச்சரிக்கைக் குறிப்பை வெளியிட்டது.
இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் "இந்துத்துவா இனவாத நடவடிக்கை" களுக்கு காரணம் டொணால்ட் ட்றம்பின் தீவிர ஆதரவாளரான இந்திய பெருங்குடி மகன் நரேந்திர மோடி என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல. மோடி மீண்டும் தடைக்குப் பின்னர் அமெரிக்கக் கிரகப் பிரவேசத்திற்குக் காரணம் அவருக்கு ட்றம்பால் ஊட்டப்பட்டதாகக் கருதப்படும் முஸ்லிம் எதிர்ப்பு இனவாதக் கொள்கைகளும் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. ஆனால் ஒன்று இந்தியாவின் பெரும்பாலான இந்து மக்கள் ஜனநாயக வழிபாடுகளில் மிகவும் தெளிவுள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
ReplyDelete