சட்டத்தை மதிக்கும் ஜனாதிபதியின், பண்பை உணர்த்திய நீதிமன்றத் தீர்ப்பு
அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவாக அதன் அனைத்து ஷரத்துக்களை மதித்து ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தி இருப்பதாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் உறுதியாகியுள்ளது. இதனால், அரசியலமைப்பு மற்றும் மக்களின் உரிமைகளை மதித்து தேர்தல் ஆணைக்குழு விரைவில் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியிலுள்ள தனது அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சட்டத்தின் ஆளுமை மிகவும் பலமாக உள்ளது என்பது இந்த வழக்கு தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளது. தாம் விரும்பு ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் மக்களின் உரிமை இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு தலைவணங்கி தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். இது நாட்டின் சட்டத்தை பாதுகாக்கும் மிக முக்கியமானது மட்டுமல்ல ஆய்வு ரீதியான தீர்ப்பு எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் இல்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தும் போது என்ன சொன்னாலும் அமைதியாக இருந்து மருந்துவம் பார்க்கும் வைத்தியரை போன்று ஜனாதிபதி செயற்பட்டார்.
தன் மீது நம்பிக்கை வைக்குமாறும் தான் அரசியலமைப்பு ரீதியாக சரியான தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறும் போது எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் அதனை பொருட்படுத்தவில்லை.
இதனால், சுகாதார சட்டத்திட்டங்களுக்கு அமைய தேர்தல் ஆணைக்குழு நாட்டு மக்களின் உரிமையை உறுதிப்படுத்த கூடிய தேர்தலே வேண்டும். தேர்தலுக்கு பயந்து ஓடியவர்களுக்கு வரலாறு படுதோல்வியை கொடுக்கும்.
எம்.ஏ. அமீனுல்லா
இந்தச் செய்திகள் செய்திச் சுதந்திரத்தின் ஆரம்பமா? என கேட்கத் தோன்றுகின்றது.
ReplyDelete