Header Ads



ஆறுமுகனின் இறுதிக் கிரியையும், அமெரிக்க தூதரம்முன் நடந்த போராட்டத்தையும் தொடர்புபடுத்த முடியாது

(இராஜதுரை ஹஷான்)

காலஞ்சென்ற  அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியையும்,  அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நேற்று  முன்னெடுக்கப்பட்ட  எதிர்ப்பு போராட்டத்தையும் தொடர்புபடுத்தி கருத்துரைக்க முடியாது.   சுகாதார  பாதுகாப்பு  அறிவுறுத்தல்கள் கடுமையாக  செயற்படுத்தப்படும்  என  முன்னாள்    பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் பி. சி. ஆர் பரிசோதனையை  புறக்கணித்த  அமெரிக்க இராஜதந்திரி தொடர்பில்,  உரிய  விசாரணை இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது.    

அமெரிக்க தூதரகத்தில் முன்பாக  முன்னிலை சோசலிச கட்சியினர் முன்னெடுத்த போராட்டம்  தவறான செயற்பாடாகும். கொரோனா வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில்  போராட்டங்களில் ஈடுபடுவது பொறுப்பற்ற செயற்பாடாகும்.  

நீதிமன்றம் போராட்டத்திற்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுப்பட்டதன் காரணமாகவே  பலர் கைது செய்யப்பட்டார்கள்.

காலஞ்சென்ற  அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதி கிரியையில் கலந்து கொள்வதற்கு பெரும்பாலான மக்களுக்கு அனுமதி  வழங்கப்பட்ட போது,  தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்படவில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

அமெரிக்க தூதரகத்தின்  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கும், ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக் கிரியைக்கும் இடையில் எவ்வித தொடர்பும்  இல்லை.  இறுதி கிரியையில் கலந்து கொண்டவர்கள் எவரும் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்குள்ளாகவில்லை. அனைத்து நடவடிக்கைகளும் சுகாதார  தரப்பினரது பாதுகாப்பு  அறிவுறுத்தல்களுக்கு அமையவே இடம் பெற்றது.

பொதுஜன பெரமுனவின்  காரியாலயத்தில் இன்று -10- இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

1 comment:

Powered by Blogger.