சஹ்ரான் குழுவின் பயங்கரவாத, தாக்குதலுக்குள்ளான பெண்ணின் தற்போதைய நிலை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த பெண்ணொருவர் 14 மாதங்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளமை அவர் குடும்பதினரை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.
நீர்கொழும்பு கட்டுவபிட்டி தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் இவர் காயமடைந்த 36 வயதான திலின ஹர்ஷினி என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு வீடு திரும்பியுள்ளார்.
இவர் நடன ஆசிரியராவார். தாக்குதலில் இவரின் முள்ளந்தண்டு கடுமையாக பாதிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பிய போதிலும், பூரண குணமடையவில்லை, சில பகுதி உணர்வற்றிருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது இடது கண் அகற்றப்பட்டுள்ளது. விரல்கள் சரியாக செயற்படாமலுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, அவரும் மூன்று பிள்ளைகளும் தேவாலயத்தில் இருந்த நிலையில், அவரது ஆறு வயதுடைய இரண்டாவது மகன் தாக்குதலில் உயிரிழந்தார். மற்ற இரு பிள்ளைகளும் காயமடைந்து, குணமடைந்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் பலத்த காயங்களுடன் ராகம போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை, தனியார் வைத்தியசாலையொன்றில் பல அறுவை சிகிச்சைக்குட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இந்த அநியாயத்தை செய்த ஸஹ்ரானும் அவனுடைய பயங்கரவாத கூட்டமும் மறுமையில் அனுபவித்தே தீரவேண்டும்
ReplyDeleteஇந்த அநியாயத்தை செய்த ஸஹ்ரானும் அவனுடைய பயங்கரவாத கூட்டமும் மறுமையில் அனுபவித்தே தீரவேண்டும்
ReplyDeleteபூரண சுகமடைய அனைவரும் பிரார்த்திப்போம்
ReplyDeleteநல் வாழ்த்துக்கள் ஹர்சினி. எல்லாரையும் மன்னித்து விடுங்கள். யாரையும் வெறுக்காதீர்கள்.எல்லா சமயங்களிலும் உள்ள பக்திமார்கமும் இறை பக்தியும் மனித நேயமும் உள்ள அமைப்புகள்தான். ஆனால் ஒரு மதம் வித்தியாசமில்லாமல் மதங்களுக்குள் காலப்போக்கில் உருவான தூய்மைவாத இஸ்ஸங்கள் மனிதர்களை பிழ்வுபடுத்தும் வன்முறையாக ஜனநாயக விரோத அமைப்புகளாக வளர்ந்து வருகிறது. இந்த வேறுபாட்டை சகல மதத்தவர்களும் புரிந்து கொள்வது அவசியம். ”இந்த தேர்தலின் பின்னர்” சுமுகமான மதநல்லிணக்க சூழல் உருவாக பிரார்திக்கிறேன்.
ReplyDelete