கைதிகளிடம் பிடிபட்ட தொலைபேசிகளில் முக்கிய தகவல்கள், சிறை அதிகாரிகள் பலர் சிக்கும் நிலை - பெரும்புள்ளிகள் மாட்டினர்
- தமிழன் பேப்பர் -
சிறைச்சாலைகளில் கைதிக் கூடங்களில் இருந்து மீட்கப்பட்ட கைத்தொலைபேசிகளில் இருந்து பல முக்கிய தகவல்களை பொலிஸ் பெற்றுள்ளதாக தெரிகிறது.
நேற்று -09- நீர்கொழும்பு சிறையில் மட்டும் 61 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டன. அதேபோல் கொழும்பு மகசின் சிறையில் 12 தொலைபேசிகளும் ,கொழும்பு புதிய சிறைச்சாலையில் இரண்டு தொலைபேசிகளும் , கண்டி போகம்பரை சிறைச்சாலையில் 4 கைத்தொலைபேசிகளும் மீட்கப்பட்டன.
நீர்கொழும்பில் மீட்கப்பட்ட தொலைபேசி ஒன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் இருவரின் படங்கள் இருந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல் நீதிமன்ற உத்தரவின் பின்னர் அந்த தொலைபேசிகளின் உள்வந்த வெளிச் சென்ற அழைப்புகள் பட்டியலை எடுத்து விசாரணை நடத்தவும் பொலிஸ் தீர்மானித்துள்ளது.
இதனால் சிறை அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பலர் விசாரணைக்குள் சிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதுகாப்பமைச்சு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஏற்கனவே இப்படியான சிலரின் விபரங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
Post a Comment