தமிழ், முஸ்லிம் மக்கள் எமது வெற்றியில் பங்குதாரர்களாக வேண்டும்
(இராஜதுரை ஹஷான்)
பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆதரவினை பெற்று தனித்து பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும்.
தமிழ், முஸ்லிம் மக்கள் எமது வெற்றியில் பங்குதாரர்களாக வேண்டும் என்பதே ஆளும் தரப்பினரது பிரதான எதிர்பார்ப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் வாக்காளர்களுக்கு விருப்பு இலக்கம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை இதனூடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலின் செயற்பாடுகள் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பதை பகிரங்கமாகவே குறிப்பிட வேண்டும்.
இடம் பெறவுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆதரவை பெற்று பாராளுமன்றத்தில் தனித்து பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும்.
தமிழ், முஸ்லிம் மக்கள் இம்முறை அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளித்தார்கள். இதனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை. எத்தரப்பினரது ஆதரவும் இல்லாமல் பொதுஜன பெரமுன தனித்து ஆட்சியமைக்கும் மக்களாணை நிச்சயம் கிடைக்கும் என்றார்.
Post a Comment