செச்னிய குடியரசு தலைவரின் அதிரடி அறிவிப்பு - மஹர் கொடுக்க தடுமாறிய ஆண்களுக்கு மகிழ்ச்சி
ரஷ்யாவின் முஸ்லிம் மெஜாரிட்டி குடியரசுகளில் ஒன்றான செசன்யாவில், கொரோனா வைரஸ்சால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இஸ்லாமிய திருமணங்களில், மணப்பெண்ணுக்கு மணமகன் சார்பில் கொடுக்கப்படும் மஹரை திரட்ட கஷ்டப்படுகின்றனர் ஆண்கள்.
இதனை அரசிடம் அவர்கள் கொண்டு செல்ல, செசன்ய குடியரசின் தலைவரான ரம்ஜான் கடிரோவ் (படம்), மஹர் கொடுக்க சிரமப்படும் ஆண்களுக்கு அரசு பொருளாதார உதவிகளை செய்யும் என்ற உத்திரவாதத்தை அளித்ததுடன், ரொக்கமாக 50,000 ரஷ்ய ரூபல்களை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 207 ஆண்கள் இதுவரை பயனடைந்துள்ளதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான RIA Novosti தெரிவித்துள்ளது.
மஹரை குறைக்க சொல்லி மணப்பெண்களிடம் கோரிக்கை வைக்காமல், மணமகன்களுக்கு தேவைப்படும் பொருளாதார உதவியை செய்திருக்கிறார்கள். மிகச் சரியான அணுகுமுறை. வெரி குட் :-)
செய்திக்கான ஆதாரம்: https://www.bbc.com/news/blogs-news-from-elsewhere-52979143
Aashiq Ahamed
இவன் ஒரு கொலைகாரன் எத்தனையோ அப்பாவி முஸ்லீம் சகோதர்களை கொல்லுறான் அத்தோடு ரஷ்ஷிய ஜனாதிபதியின் கொலை கூலிப்படை எல்லாம் இவனின் அடியாள்கலால் தான் நடைபெறுகின்றன.
ReplyDeleteMasha Allah Masha Allah,
ReplyDelete