Header Ads



சுலைமானி படுகொலை - அமெரிக்க உளவாளிக்கு விரைவில் மரண தண்டனை - ஈரான்

ஈரான் ராணுவ தளபதி சுலைமானி படுகொலை விவகாரத்தில் தொடர்புடைய அமெரிக்க உளவாளிக்கு கூடிய விரைவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை ஈரானின் நீதித்துறை சேவையின் செய்தித் தொடர்பாளர் கொலம்ஹொசைன் இஸ்மெய்லி தெரிவித்துள்ளார்.

ஈரானிய உளவுப்படையில் பணியாற்றியவரும், அமெரிக்க உளவாளியாக செயல்பட்டவருமான Mahmoud Mousavi-Majd என்பவரை மரண தண்டனைக்கு விதித்துள்ளனர்.

இந்த நபரே சுலைமானி தொடர்பிலான அனைத்து தகவல்களையும், எதிரி நாட்டுக்கு அளித்துள்ளார் என கொலம்ஹொசைன் தெளிவுபடுத்தினார்.

ஈரான் நாட்டின் ராணுவத்திற்கு அளப்பரிய பங்காற்றிய சுலைமான், ராணுவத்திலும் அரசாங்கத்திலும் ஒரேப்போன்று பலம்பொருந்தியவராக இருந்தார்.

இந்த நிலையிலேயே கடந்த ஜனவரி 7 ஆம் திகதி சுலைமானி உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள் ஏழு பேர் அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றால் தாக்குதலுக்கு இலக்காகினர்.

ஈரானின் குத்ஸ் படைகளின் தலைவராக செயல்பட்ட குவாசிம் சுலைமானி, டெல்லி முதல் லண்டன் வரை தீவிரவாத தாக்குதல்களுக்கு திட்டம் வகுத்தார் எனவும்,

இதன் தொடர்ச்சியாக ஏற்படவிருக்கும் பின்விளைவுகளை தடுக்கவே சுலைமானியை கொன்றதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விளக்கமளித்தார்.

மட்டுமின்றி அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீதும், ராணுவ அதிகாரிகள் மீதும் சுலைமானி தலைமையிலான படைகள் கொடூர தாக்குதல்கள் பல முன்னெடுத்திருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இதனிடையே, சுலைமானியின் இழப்பிற்கு பழிவாங்கும் வகையில், ஈராக்கில் அமைந்திருந்த அமெரிக்க ராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை முன்னெடுத்தது.

இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் பலர் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது குறுப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.