முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதத்தை, வியாழேந்திரன் நிறுத்த வேண்டும்
- ஏ.பி.எம்.அஸ்ஹர் -
இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி அரசியல் லாபம் பெற முயற்சி செய்ய வேண்டாம். என கிழக்கு முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத் முன்னாள் பாராளுமன்ற வியாழேந்தரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதும் பின்னர் சமரசம் கொள்வதும் இயற்கையான ஒன்று. அதேநேரம் இரு சமூகங்களுக்கு இடையே ஏற்படும் தனிப்பட்ட மோதல்களை இனமோதல்களாகச் சித்திரித்து அதன் மூலம் அரசியல் லாபம் தேட முற்படுவது முற்போக்கு எண்ணம் கொண்டோரின் நல்ல செயல் ஆகாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான செயல்பாடுகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான வியாழேந்திரன்(அமல்) இறங்கியிருப்பது கண்டனத்துக் குரிய செயற்பாடாகும்.”
இவ்வாறு தெரிவிக்கின்றார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீல. முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஹாபிஸ் நஸிர் அஹமட்.
இதுகுறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
அண்மைக்காலங்களில் குறிப்பாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழேந்திரன் மேற்கொள்ளும் செயற்பாடுகள் இன முரண்பாட்டை தோற்றிவிக்கும் செயற்பாடுகளாக அமைந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது. எதிர்வரும் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற சுயலாப எண்ணத்துக்காக அவர் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றார் என்பது தெளிவு.
ஏறாவூர்-5 எல்லைப் பிரச்சினையாகட்டும்,வாகரை பிரதேச சபை எல்லை பிரச்சினை யாகட்டும், தற்போது தனிப்பட்டவர்கள் மத்தியில் நடந்த வானனேரி மண் அகழ்வில் ஏற்பட்ட பிரச்சினையாகட்டும் அனைத்திலும் அவர் தனது தனிப்பட்ட நலன் கருதி சமூகங்களுக்கு மத்தியில் பிரச்சினைகளைக் கிளப்பி அதில் குளிர்காய முற்படுகின் றாhர் என்பது அம்பட்டமாகத் தெரிகின்றது.
இத்தகைய நடைமுறை எதிர்காலத்தில் இனங்களுக்கு மத்தியில் பாரிய பிரச்சினை களை ஏற்படுத்தும் காரணியாக அமைந்துவிடும் என்பதை நினைவில் கொள்ளவேண் டும். நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் இனங்களின் இடையே நல்லிணக்கமும் புரிந்துணர்வும் ஏற்பட்டுவரும் இவ்வேளையில் இவ்வாறான கீழ்தரமான நடவடிக்கை களை மேற்கொண்டு இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த எவரும் முனையக்கூடாது.
தத்தமது சமூகங்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் எழும்போது அதனைக் கவனிக்க வேண்டியதும்
பிறசமூகங்கள் அதில் தொடர்புபட்டிருந்தால் அதில் மிக கவனம் கொண்டு செயற்பட வேண்டியதும் அரசியல் ஆளுமைகளின் கடமையாகும்.
எனினும் அவற்றை பேச்சு வார்த்தைகள், கலந்துரையாடல்கள் மற்றும் புரிந்துணர்வு நடவடிக்கைகள் மூலம் தீர்வு செய்வதற்கு முன்வரவேண்டுமே தவிர இனமுறுகலை ஏற்படுத்தும் வீர வசனங்களினாலும் வெட்டிப்பேச்சுகளினாலும் ஒருபோதும் தீர்வு கண்டுவிட முடியாது.
தேர்தலை நோக்கமாகக் கொண்டு செயற்படும் வியாழேந்திரன் போன்றவர்கள் தமது பதவி காலத்தில் மக்களுக்கு சிறப்பான பணிகளை ஆற்றியிருந்தால் அவர்கள் மீண்டும் வெற்றி பெறுவது இலகுவானது ஆனால் மக்கள் பணியை மறந்து மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டுமாயின் இவ்வாறான நடவடிக்கைகளில் தான் இறங்க வேண்டும் என்பது பொது கணிப்பாகும்.
எனவே இனிமேலாவது சிண்டுமுடியும் வேலையை கைவிட்டு சமூக நல்லிணக்கச் செயற்பாடுகளை செய்ய முன் வர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment