அளுத்கம சிறுவன் விவகாரம் - நீதிமன்றத்தில் உரிமை மனு தாக்கல் செய்ய தீர்மானம்
- Rajeevan Arasaratnam -
அளுத்கமவில் பொலிஸாரினால் தாக்கப்ட்டு சட்டவைத்திய அதிகாரியினால் இனரீதியில் நிந்திக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்வதற்கும்,உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கும் தீர்மானித்துள்ளனர்.
ஆங்கில நாளேடு ஒன்றிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மே 25 ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது ஒரு மாதத்திற்குள் மாதத்திற்குள் நாங்கள் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்த பின்னர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்வோம் சிறுவனின் உறவினரான பஸ்லான் சமீம் என்பவர் தெரிவித்துள்ளார்.
சிறுவன் கட்டுக்கடங்காத விதத்தில் நடந்துகொண்டான் என்ற கதையை உருவாக்குவதற்கு பொலிஸார் முயல்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட விடயத்தை நேரில் பார்த்த அனைவரும் அறிக்கைகளாக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளனர், வீடியோ ஆதாரங்களும் உள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவத்தின் பின்னர் பொலிஸார் இந்த விடயத்தை சட்டரீதியாக அணுகவேண்டாம் என குடும்பத்தவர்களிற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை சட்டரீதமியாகத்தான் அணுக வேண்டும். இதில் யார் யார் எல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பதனை அரசின் உயர் மட்டங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ReplyDelete