புரியாணி கிடைக்கப்போவதில்லை, வேண்டுமென்றே முஸ்லிம்கள் நசுக்கப்பட்டனர் - முஜிபுர் ரஹ்மான்
மஹிந்த தரப்புக்கு இனியொருபோதும் முஸ்லிம் வாக்குகக் கிடைக்காது, புரியானியும் கிடைக்கப்போவதில்லை என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலின்போது ராஜபக்ஸ அரசாங்கம் சர்வதேச நியமங்களையும் மீறி முஸ்லிம்களின் ஜனாஸாக்களை வலுக்கட்டாயமாக எறித்ததே முஸ்லிம்களின் இந்த நிலைப்பாட்டிற்கு காரணம் எனவும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் மெகட கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந் கூட்டத்தில் முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர்களான ஏ.ஜே.எம்.பாயிஸ், அர்ஷாத் நிஸாமுதீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான சமீர் சஹாப்தீன், ரீஸா சரூக், தில்ஷான், ரம்ஸி ஹாஜி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த மக்கள் சந்திப்பில் மேலும் உரையாற்றிய முஜிபுர் ரஹ்மான்,
முஸ்லிம்கள் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியில் பங்களிப்பு செய்தனர். 2005 ஜனாதிபதித் தேர்தலிலும், 2010 ஜனாதிபதித் தேர்தலிலும் பாரியளவில் வாக்களித்து ஆட்சியின் பங்காளிகளாக இருந்தனர். 2010 க்கு பின்னர் முஸ்லிம் விரோதப் போக்கு கடைபிடிக்கப்பட்டமையினால் அவர்களுக்கான வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டது. எனினும் ஒரு தரப்பினர் தொடர்ந்து மஹிந்த தரப்புக்கு ஆதரவளித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தெஹிவளையில் இடம்பெற்ற சந்திப்பில் தனக்கு புரியானி கிடைத்த விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பேசியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸ ஒருவிடயத்தை மாத்திரம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும், கடந்த காலங்களில் புரியானியாவது கிடைத்தது, இனிவரும் காலங்களில் அதனையும் எதிர்ப்பாக்க வேண்டாம் என்பதை பிரதமர் புரிந்துகொள்ள வேண்டும்.
ஏனெனில், ஜனாதிபதி அதிகாரம் ராஜபக்ஷாக்களின் கைகளுக்கு மீண்டும் வந்தபின்னர் முஸ்லிம்களின் உணர்வுகளை அதிகம் காயப்படுத்தும் விதமாக ஜனாஸா விடயத்தில் கை வைத்தனர்.
கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை கட்டாயம் எரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த அரசாங்கம் எடுத்தது. சர்வதேச ரீதியில் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு ஒழுங்கு விதிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தாலும் இந்நாட்டில் பலவந்தமாக முஸ்லிம்கள் மீது அதிகாரம் தினிக்கப்படுகின்றது. இதனால் முஸ்லிம்கள் மன உலைச்சலுக்கு ஆளாகினர். முஸ்லிம் தரப்பிலிருந்து பல்வேறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட பேதிலும் அவை புறக்கணிக்கப்பட்டன. இந்நாட்டில் வேண்டுமென்றே முஸ்லிம்கள் நசுக்கப்பட்டனர். இந்நிலையில் அடுத்த தேர்தலில் முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்துக்கு வாக்களிக்க மாட்டார்கள், அத்துடன், புரியானியும் வழங்க மாட்டார்கள் என்றார்.
Post a Comment