Header Ads



கொழும்பில் அமெரிக்கத் தூதரகத்தின் முன் ஆர்பாட்டம் செய்ய தடை

கொழும்பில் அமெரிக்க சீன தூதரகங்களிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜோர்ஜ் புளொயிட்டின் கொலைக்கு எதிராக முன்னிலை சோசலிச கட்சி நாளை அமெரிக்க தூதரகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

என்னால் சுவாசிக்க முடியவில்லை என்ற ஆர்ப்பாட்டம் நாளை பகல் ஒரு மணிக்கு இடம்பெறவுள்ளது

.இதேவேளை கொழும்பில் 8ம் திகதி முதல் 11ம் திகதிவரை நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு எதிராகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரசினால் இலங்கை சந்தித்துள்ள பொருளாதார இழப்புகளிற்கு நஸ்டஈடு கோரி நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சீனா தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்களை பத்தாம் திகதி மேற்கொள்ளவுள்ளது.

No comments

Powered by Blogger.