Header Ads



புலிகளை அழிக்க ஒத்துழைத்த, கருணாவை மன்னிப்போம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்த கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், புலிகள் அமைப்பைத் தோல்வியடைச் செய்வதற்கு தீர்மானமிக்க ஒத்துழைப்பு நல்கிய அரசாங்கத்தின் சாட்சியாளரெனத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க, ஆகையால், சட்டத்தின் முன்னிலையிலும் அவருக்கு மன்னிப்பு கிடைக்கும். நாமும் கருணாவை மன்னிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.   

“விடுதலைப் புலிகள் அமைப்பை இரண்டாகப் பிரிப்பதற்கும் அவ்வமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனிப்படுத்துவதற்கும் கருணா அம்மானால் மட்டுமே முடிந்தது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

புலிகள் அமைப்பை கைவிட்டுவிட்டு, இலங்கைப் படையினருடன் இணைந்து, வடக்கு யுத்தத்தை வெல்வதற்கு பெரும் ஒத்துழைப்பை நல்கியவரே கருணா அம்மான் என்றும் தெரிவித்துள்ள எஸ்.பீ.திஸாநாயக்க, அவருக்கு மன்னிப்பளிக்கவேண்டம் என்றார்.   

ஆணையிறவில் 2000 படையினரை ஒரேநாள் இரவில் கொன்றொழித்ததாக, கருணா அம்மான் கூறியிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் கருத்துரைக்கும் போதே, எஸ்.பீ.திஸாநாயக்க மேற்கண்டவாறுத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.