முஸ்லிம்களுடைய ஆதரவும், பங்களிப்பும் அவசியம் - பாரிஸ்
ஐக்கிய தேசிய கட்சி இரு கூறுகளாப் பிரிந்து இரு தரப்பினர்களுக்கிடையே உட்பூசல் மிகவும் பலமடைந்து அந்தக் கட்சியினர்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளனர். நிலையில் இந்நாட்டில் கோத்தபாய ராஜபக்~ ஜனாதிபதியாகவும் மஹிந்த ராஜபக்~ பிரதமராகவும் தொடர்ந்து இருப்பதற்கு முஸ்லிம்களுடைய ஆதாரவும் பங்களிப்பும் அவசியம் என்று கண்டி மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன வேட்பாளர் ஏ. எல். எம். பாரிஸ் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொரொனா தொற்றினால் சகலரும் புதிய மாற்றத்திற்கு உட்பட நிலையில் உள்ளனர். எமது நாட்டிலும் கொரோனா கலாசாரம் உருவெடுத்துள்ளது. தேர்தல் என்பது பொதுவானதாகும். வேறு காலங்களில் தேர்தல் திகதி அறிவித்தல் விடுத்தவுடன் தேர்தல் தொகுதிகளில் கூட்டம் நடத்துவோம். அப்போது எமது கட்சி ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கில் வருவார்கள். தற்போது எங்களுடைய கூட்டத்தை 100 பேருடன் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணி பாதுகாப்புடன் தான் கூட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. நாட்டுக்குள் புதிய காலாசாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இது மிக அவசியமாகும். நாங்கள் கூட்டம் நடத்துவதாயின் கோத்தபாய ராஜபக், மஹிந்த ராஜபக் கோல் பேஸ் மைதானத்தில் பெரும் சனக் கூட்டத்தை கூட்ட முடியும். அவ்வாறு எங்களுக்குச் செய்ய முடியும். கொரோனா காரணமாக பொறுப்புக் கூற வேண்டிய கட்சி என்ற வகையில் மக்களைப் பாதுகாப்பதே எங்களுடைய முக்கிய நோக்கமாகும்.
இந்த தேர்தலை நாங்கள் வெற்றி கொள்வதற்கான முக்கிய காரணம் இரண்டாகும். ஒன்று மஹிந்த ராஜபக்~ அவர்களை எமது நாட்டுக்குப் பிரதமராக நியமிக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டில் மஹிந்த ராஜபக்~ அவர்கள் சூழ்ச்சியினால் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்~ அவர்களை மீண்டும் தலைவராக நியமிப்பதற்கான போராட்டம் தொடரேச்சியாக இடம்பெறுகிறது. தற்போது மஹிந்த ராஜபக்~ பிரதமராக இருந்தாலும் அந்தப் பிரதமர் பதவி மக்களுடைய வாக்குகளினால் கிடைக்கப்பபெற்ற பிரதமர் பதவி இல்லை. ஜனாதிபதியின் மூலம் நியமிக்கப்பட்டதாகும். நாங்கள் மக்களுடைய வாக்குகளினால் மஹிந்த ராஜபக்~ அவர்களை பிரதமராக்குவதற்கான போரட்டத்தையே நடத்துகின்றோம். உள்ளுராட்சி மன்றங்களுக்கான முதலாது போராட்டத்தின் வெற்றியாகும். அன்று உள் நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து அர்ப்பணிப்புடன் நாட்டை ஒருமுகப்படுத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்த எமது தலைவர் இந்நாட்டின் மக்களின் வாக்குகளினால் பிரதமராக்குவதற்கு எமக்கு கிடைத்துள்ள ஒரு சிறப்பான சந்தர்ப்பமாகும்.
எனினும் அந்த வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது இந்நாட்டுக்கு மக்கள் கோத்தபாய ராஜபக்வுக்கு 69 இலட்சம் பெரு எண்ணிக்கையிலான வாக்குகள் வழங்கி ஜனாதிபதியாக்கினார்கள். இந்நாட்டு மக்களுடைய முழுமையான எதிர்பார்ப்பு ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக் இருக்க வேண்டும் என்பதுதான். ஆனாலும் ஜனாதிபதி வேலைத் திட்டங்களை முன்னெடுத்தாலும் பெரும்பான்மையான பாராளுமன்றப் பலம் எங்களுக்கு இருக்க வில்லை. எதிர்கட்சிக்குத் தான் பலம் இருந்தது. தொடர்ந்து நாளுக்கு நாள் இடையூறுகளை விளைவித்தார்கள். எனினும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்வுக்கு வேலை செய்யக் கூடிய ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்நாட்டினுடைய எதிர்காலம் இப்படியான ஆட்சியை உருவாக்குவதிலே மட்டும் தான் இருக்கிறது. அந்த வகையில் இத் தேர்தலின் பிரதான இலக்கு இரண்டாகும் . ஒன்று மஹிந்த ராஜபக்வை பிரதமராக்குவதும் அடுத்தது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்~ வேலை செய்யக் கூடிய ஆட்சியை உருவாக்குவதுமாகும்.
இத்தேர்தலின் போது நாங்கள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்களிடம் ஆதரவை வேண்டி நிற்கின்றோம். நாங்கள் அரசியலமைப்புப்படி செல்வதாயின் மூன்றில் இரண்டு பங்கு பலம் கட்டாயம் அவசியம். ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் கட்சிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு சிலர் ஒன்று சேர்ந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை எடுத்துக் கொண்டு போட்ட விளையாட்டை நாம் அறிந்தோம். மத்திய வங்கிக் கொள்ளைக் காரர்களை பாதுகாத்தார்கள். விமானச் சேவை கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மோசடி செய்தார்கள். இப்படி பல கீழ்த்தரமான அரசியலை நல்லாட்சி அரசாங்கம் செய்தது. பெயரளவில் நல்லாட்சி என்று சொன்னாலும் நாட்டை நாசமாக்கிய ஆட்சி ஒன்று. நல்லாட்சியினர் நாட்டை நாசமாக்கியதை திருத்தியமைப்பதற்கு மூன்றில் இரண்டு பலம் வாய்ந்த ஆட்சி அவசியம். அரசியலமைப்பை மாற்றி நாட்டுக்கு உகந்த அரசியலமைப்பைக் கொண்டு வருதல் வேண்டும். இதற்கு முஸ்லிம்களுடைய ஆதரவு அவசியமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment