இம்தியாஸ் பாகிர் மார்க்காரின் ஆதங்கம்
ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கும் அறிக்கைகளால் பிரதமரதும் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரமும் 02 தரம் குறைக்கப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ்பாகீர் மாகார் கூறினார்.
தேசிய மக்கள் கட்சி தலைமையகத்தில் கட்சியின் தேசிப்பட்டியல் அபேட்சகர்கள் கூட்டத்தில் பேசுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது,
இதன் மூலம் நிருவாக உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் குப்பைக் கூடைக்குத் தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்றம் இவ்வாறு புறக்கணிக்கும் போது பிரமருக்கும் மக்களுக்கும் இருக்கும் கௌரவம் என்ன? இந்த தான்தோன்றித்தனமான வேலை காரணமாக பிரதமர் அமைதி காப்பதில் என்ன தெளிவாகின்றது?
இருக்கும் அதிகாரத்தைக் கூடமக்களுக்காக அவரால் பயன்படுத்த முடியாத நிலை இருக்கின்றது.
அவருக்கு 50 வருட அரசியல் அனுபவம் இருக்கின்றது. ஆனால் அவரால் இந்த தான்தோன்றித்தனத்தை எதிர்க்க முடியாத நிலை இருக்கின்றது.
அப்படியானால் அவரை மீண்டும் பிரதமராக எப்படி நியமிப்பது? என்றும் இம்தியாஸ் பாகீர் மாகார் கேள்வி எழுப்பினார்.
ஸ்ரீ லங்கா சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது; ஆனால், தேவை ஓர் நேர்மையான சர்வாதிகாரியே.
ReplyDelete