Header Ads



இங்கிலாந்தில் கலக்கும், இலங்கை இஸ்லாமிய சகோதரர் (வீடியோ)



- அன்ஸிர் -

இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து குடிபெயர்ந்து இங்கிலாந்தில் வாழும்,  அப்துல் கரீம் முபீஸ் இங்கிலாந்து ஊடகங்களில் மிகவும் பிரபல்யமாகியுள்ளார்.

இந்தியாவின் நம்பர் வன் பணக்காரர் முகேஸ் அம்பானி முதற்கொண்டு, பல்வேறு நட்சத்திரங்கள் வரை இவருடைய நீண்டகால வாடிக்கையாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக லூட்டன் நகரில்  AONE DOSA என்ற பெயரில் ரெஸ்ட்டூரன்ட் நடத்திவரும் இவர், கடந்த வாரம் இங்கிலாந்து ஊடகங்களில் மேலும் பிரசித்தமாகியுள்ளார்

அதாவது, கொரோன நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதியில் Go Dharmic தொண்டு நிறுவனம்,  AONE DOSA உடன் இணைந்து, பகல் வேளைகளில் இலவச சாப்பாட்டு பொதிகளை வழங்கி வருகிறது.

சுவையினை முதன்மையாக கொண்டு செயற்படும் இவரது ரெஸ்ட்டூரன்டில் பங்காளராக அப்துல் கலாமும் செயற்படுவதுடன் உதவியாளர்களாக முயீத் மற்றும் றிப்கான் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

அவர் குறித்து BBC தொலைக்காட்சி வெளியிட்ட ஓரு வீடியோவை கீழே காணலாம்.





4 comments:

  1. Masha Allah mama your really great may Allah give barakath and success

    ReplyDelete
  2. இதெல்லாம் அங்கு எப்படி சாத்தியம்? பிரிட்டிஷ்காரர்களிடம் இனத்துவேசம் இல்லை. மிகச் சிறந்த முறையில் மக்களுடன் பழகுகின்றார்கள். பொதுத் தொண்டுகளுக்கு நிறைய நிறைய பொருளை அள்ளி அள்ளி வீசுகின்றார்கள். பெரும் கல்வியாளர்கள். முஸ்லிம் சமூகம் எத்தனையோ வீரதீரச் செயற்பாடுகளில் தம் உயிர்களைக்கூட பொருட்படுத்தாமல் செய்து அங்கு சாதனை புரிந்து காட்டி இருக்கின்றார்கள். அதனால் ஏன் நாமும் இஙகிலாந்தில் பிறந்திருக்கக்கூடாதா என்ற எண்ணம் எங்களுக்குள்ளும் உதிப்பது சாதாரணம்தான். இங்கிலாந்து உன்னதமான நாடு. பொருளாதாரம் அங்கு அபரிமிதமாக வளர்ந்து கொண்டு வருகின்றது. அவரகள் திட்டமிட்டு நாட்டினை வளர்க்கின்றார்கள். இங்கிலாந்து நாட்டினர் பல்வேறு தியாகங்களை நாட்டிற்காக செய்து வருகினறனர். நாட்டுப்பற்று மிழகவும் உள்ளவரகள். அவரகள் மத்தியில் ஏதோ சில சில பிரச்சினைகள் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் அங்குள்ளவரகள் பெரிதாக கணக்கில் எடுப்பதே இல்லை. இப்படியான ஒரு அழகிய நாடாக இலங்கைனயும் வராதா என்று இங்கு வாழும் அனைத்து மக்களும் கனவு கண்டு கொண்டிருக்கினறார்கள். உண்மைதான்! ஆனால் அவரகளது கனவு ஒருபோதும் நிறைவேறப் போவது இல்லை. காரணம் பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகள் எமது நாட்டில் சராசரிக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவரகள் சொல்லும் பாட்டிற்கு தாளம் போடும் மக்கள். பணத்திற்கு மதிமயங்கும் அடிவருடிகள். கல்வி அறிவற்ற கூட்டம். தமது அரச கடமைகளையும் ஏனைய பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்றாத மக்களும், அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும். இவற்றை எல்லாம் பார்த்தும் பாராமலும் வீதியின் ஓரமாக நடந்து செல்லும் மக்கள். இப்படியான நாடு எப்படி முன்னேறும். இங்கு வாழ்பவரகள் என்ன சிங்கபூர் குடிமக்களா?

    How is all this possible? The British have no ethnicity. People interact with people in the best possible way. Public charities are throwing out a lot of material. Great educators. The Muslim community living there has achieved so many heroic deeds regardless of their lives. So it is normal for us to wonder why we shouldn't have been born in England. England is a classic country. The economy is booming. They are planning and cultivating the country. The people of England made many sacrifices for the country. Patriotic mixes. There are a few problems among them, but they do not take much account of it. All the people living here are dreaming of such a beautiful country. It is true! But their dream will never come true. The reason is that politicians who are known to survive are living above average in our country. People who rhythm to their words. Subsidiaries of value for money. Non-academic meeting. People, politicians and state officials who do not fulfil their duties and responsibilities. People are walking along the side of the road without looking at it. This is how the country progresses. What are Singaporeans who live here?

    ReplyDelete

Powered by Blogger.