பப்ஜி என்ற விளையாட்டு ஆபத்தான, கேடு விளைவிக்கின்ற ஹராம்
பப்ஜி என்ற பெயர் குறிப்பிடப்படும் விளையாட்டு ஆபத்தான, கேடு விளைவிக்கின்ற, ஹராமான ஒரு விளையாட்டு. அதனை விளையாடுவது கூடாது. விஷேடமாக அதன் இறுதி அப்டேட். காரணம்; அது தூய்மையான ஏகத்துவ அகீதஹ்வுக்கு எதிரான யுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு சாதனமாக இருக்கின்றது.
அது அதனை விளையாடுபவர்களின் உள்ளத்தில் சிலை வணக்கத்தையும் அவற்றை கண்ணியப்படுத்துவதையும் விதைக்கின்றது. வன்முறையையும் அனுமதியற்ற முறையில் யுத்தம் புரிவதையும் பயிற்றுவிக்கின்றது. மார்க்க வரையறைக்கு வெளியால் இருபாலாருக்கும் இடையிலான தொடர்புகளுக்கு வழிவகுக்கின்றது.
விளை நிலங்களையும் கால்நடைகளையும் அழித்திடும் வழிகெட்ட சிந்தனைகளை வாலிபர்களிடையே வளர்கின்றது. முஸ்லிம்கள்; விஷேடமாக (பெற்றோர்,) பாதுகாவலர்கள் இது விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பதோடு மற்றவர்களையும் எச்சரிக்கை செய்வது கட்டாயக் கடமையாகும்.
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் 66:6)
_கலாநிதி ஹமத் இப்னு முஹம்மத் அல்-ஹாஜிரி_
Post a Comment